தங்களுடைய கனவு வீட்டை நினைவாக்கிக் கொள்வதற்கு பலரும் நாடுவது ஹௌசிங் லோன்களைத் தான். லோன் பெறும்போது அவற்றை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். அதோடு பிற கடன்களோடு ஒப்பிடும்போது ஹோம் லோன்களுக்கு வட்டி சற்று அதிகம். எனவே கையில் பணம் இருந்தால் அவற்றை உடனடியாக செலுத்தி பத்திரத்தை மீட்டு வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் பெரும்பாலான லோன் பெற்றவர்களின் எண்ணம்.
அதற்கு ஏற்றார் போல் சம்பள உயர்வு அல்லது வருடாந்திர போனஸ் கிடைத்தால் வீட்டுக் கடனில் எப்படி செலுத்தலாம்? என்றும் சிலர் யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். சிலர் ஈஎம்ஐ தொகையை அதிகரித்துக் கட்டலாமா? அல்லது மொத்த தொகையாக முன்கூட்டியே செலுத்தி விடலாமா? என்றும் எண்ணுவார்கள். இந்த 2 ஆப்ஷனில் எது சரியானது? ஈஎம்ஐ தொகையை அதிகரிப்பது சிறந்ததா? அல்லது முன்கூட்டியே பணத்தை மொத்தமாக வரவு வைப்பது சிறந்ததா? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

ஈஎம்ஐ தொகையை அதிகரித்து செலுத்துவதால் என்ன நன்மைகள்?:
விரைவாக கடனைச் செலுத்தலாம்: உங்கள் ஈஎம்ஐ தொகையை அதிகரிப்பது அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதை விரைவாக்கும். இதனால் கடன் காலம் குறைந்து வட்டியும் குறையும்.
கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தலாம்: ஈஎம்ஐ தொகையை அதிகரித்து செலுத்தி வந்தால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மேம்படும். இதனால் எதிர்காலத்தில் கடன் பெறுவது எளிதாகும்.
நெகிழ்வுத்தன்மை: உங்களுடைய வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, இதே போல உங்கள் ஈஎம்ஐ தொகையை அதிகரித்து கடன் காலத்தையும் குறைத்து, வட்டி செலுத்துவதையும் குறைக்க முடியும்.
ஈஎம்ஐ தொகை அதிகரிப்பதால் ஏற்படும் தீமைகள்: ஈஎம்ஐ தொகையை அதிகரிக்கும் போது அவை உங்களுடைய மாதாந்திர செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உங்களால் அனைத்தையும் சமாளிக்க முடியும் என்றால் பிரச்சனை இல்லை. அதுவே கூடுதலாக பணம் கிடைக்கும்போது அவற்றை செலவு செய்ய வேண்டும் என்று சிலர் எண்ணுவார். அப்படி இருக்கையில் இஎம்ஐ தொகைக்கு முழுவதுமாக பணத்தை செலுத்தும் போது சிரமமானதாக தோன்றலாம்.
முன்கூட்டியே பணம் செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?:
நெகிழ்வுத் தன்மை: முன்கூட்டியே பணம் கிடைத்தால்.. அதை வைத்து உங்கள் கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.
வட்டி சேமிப்பு: ஹோம் லோன் வாங்கியவர்கள் கடன்கால முழுவதும் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தால், வாங்கிய கடனுக்கு நிகராக வட்டி செலுத்தியிருப்பதை உணரலாம். இதைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் போது அசலை மட்டும் செலுத்தி வரலாம். இதனால் வட்டியை குறைக்க முடியும்.
முன்கூட்டியே பணம் செலுத்துவதால் ஏற்படும் தீமைகள்: கையில் பணம் கிடைக்கும் போது அதை கொண்டு கடனை திருப்பிச் செலுத்தி விட்டால் பிற திட்டங்களில் முதலீடு செய்வது தவிர்க்கப்படும். இதனால் பிற்காலத்தில் கிடைக்கும் வருமானம் கிடைக்காமல் போகலாம்.
இஎம்ஐ தொகையை அதிகரிப்பதும் சரி முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்துவதும் சரி அவரவரின் நிதி நிலையை பொறுத்தது தான். இஎம்ஐ தொகையை அதிகரித்தால் மாத செலவுகளை சமாளிக்க முடியும் என்றால் தாராளமாக நீங்கள் கடன் பெற்ற நிதி நிறுவனத்தில் சொல்லி அதிகரிக்கச் செய்யலாம். அதுவே கையில் பணம் கிடைக்கும் போது அவற்றை முன்கூட்டியே செலுத்தி கடனை முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கையில் பணம் கிடைத்தால் வங்கிக்கு சென்று அவற்றை அசலில் வரவு வைக்கலாம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications