ஒவ்வொருவருக்குமே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது நீண்ட நாட்களாக இருக்கும் ஆசை. ஆனால் செங்கல் விலை, சிமெண்ட் விலை ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இன்றைய சூழலில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சரி வீட்டை கட்டாமல், கட்டிய வீடுகளாக வாங்கிவிடலாம் என்றாலும் ரியல் எஸ்டேட் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இதனால் சாதாரண மக்களுக்கு வீடு வாங்கும் கனவு கனவாகவே போய்விடுகிறது. அனாலும் சிலர் விடாமுயற்சியுடன் வீட்டுக் கடன் பெற்றாவது வீடு வாங்கி விட வேண்டும் என்று எண்ணுகின்றனர். அப்படி வாங்கி விட்டு பின்னர் ஈஎம்ஐ செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
ஹோம் லோன் வாங்கி வீடு வாங்கினால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?: ஹோம் லோன் வாங்கி வீடு வாங்க திட்டமிட்டிருந்தால் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டை வாங்க வேண்டும். ஒரு வேளை அதைவிட அதிகமாக விலை உயர்ந்த லக்சரி வீட்டை வாங்கினால் மாதாந்திர ஈஎம்ஐ செலுத்துவதில் பிரச்சனை ஏற்படலாம். தற்போது நீங்கள் நல்ல ஒரு ஜாபில் இருந்தாலும் எதிர்காலத்தில் சிக்கல்கள் எழாமல் இருக்க உங்கள் வேலை வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இதை தெரிந்து கொள்ள நீங்கள் ஒரு ஃபார்முலாவை பயன்படுத்தலாம்.

வீடு வாங்க பயன்படுத்த வேண்டிய ஃபார்முலா: 3/20/30/40 என்ற ஃபார்முலாவை பயன்படுத்தி எவ்வளவு வீட்டுக் கடன் வாங்க வேண்டும்?, அதை எத்தனை ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும்? என்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதில் முதலில் இருக்கும் 3 என்பது உங்கள் வீட்டின் விலை, உங்கள் ஆண்டு வருமானத்தை விட 3 மடங்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கிறது.
ஃபார்முலாவில் உள்ள அடுத்த 20 என்பது 20 ஆண்டுகள்.. அதாவது உங்கள் கடனின் காலம் 20 ஆண்டுகளுக்கு மேல் கட்டாயமாக இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. அடுத்ததாக இருக்கும் 30 என்பது சம்பளத்தில் 30 சதவீதத்தை குறிக்கிறது. வீட்டு கடனுக்கான உங்கள் மாதாந்திர ஈஎம்ஐ சம்பளத்தில் 30 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. சிலர் 50,000 சம்பளம் பெற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் ரூ.25,000 வரை ஈஎம்ஐ செலுத்துவார்கள். இது அப்படியே பாதிக்குப் பாதி. எனவே உங்களுடைய சம்பளத்தில் 30 சதவீதத்திற்கும் மேல் ஈஎம்ஐ செலுத்த பயன்படுத்தக் கூடாது. அடுத்து வரும் 40 என்பது 40 சதவீத முன்பணத்தை குறிக்கிறது. கடன் வாங்கும் போது வீட்டின் விலையில் 40 சதவீதத்தை முன் பணமாக செலுத்தி தான் வாங்க வேண்டும். இது உங்களுடைய கடன் சுமையை மேலும் குறைக்கும்.
எனவே லோன் வாங்க விண்ணப்பிக்கும் முன் இந்த பார்முலாவை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் போது எதிர்கால சிக்கல் இல்லாமல் ஈஎம்ஐ செலுத்த முடியும். அதோடு சொந்த வீட்டு கனவை எளிதில் நினைவாக்க முடியும்.


Click it and Unblock the Notifications