ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு போதுமான வட்டி குறைப்பை அறிவிக்கப்பட்டு உள்ளது, ஆனாலும் அதற்கான முழுமையான வளர்ச்சி வெளிப்படவில்லை எனச் சில மாதங்களுக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அறிவித்த மினி பட்ஜெட் மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்த 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகியவற்றில் பல்வேறு ஊக்க திட்டங்கள், நிதியுதவி ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த 2 காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியில் இருந்து நிலையான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டு கடன், வாகன கடன், பர்சனல் லோன் கொடுக்கும் வங்கிகள் இதுதான்..! முழுவிபரத்தை தெரிந்துக்கொள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

ரெப்போ விகிதம்
இன்று ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை எவ்விதமான மாற்றமும் செய்யாமல் 4 சதவீத வட்டி விகிதம் தொடரும் என அறிவித்துள்ளார். இதேபோல் ரிசர்வ் வங்கியின் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவே அடுத்த இரண்டு மாதங்களுக்கும் தொடரும் என இன்று தெரிவித்துள்ளார்.

முக்கிய கடன்கள்
இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு எவ்விதமான வட்டி விகிதமும் மாற்றமும் இருக்காது என் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி முடிவுகள்
ரிசர்வ் வங்கி தனது அடிப்படை கடன் விகிதத்தை அறிவித்துள்ள நிலையில் வர்த்தக வங்கிகள் தற்போதைய வர்த்தகச் சூழ்நிலையில் கடனுக்கான வட்டியை உயர்த்த வாய்ப்பு இல்லை, ஆனால் வங்கி நிர்வாகத்தின் முடிவுகள் படி வங்கிகள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வட்டியை உயர்த்தலாம்.

CRR விகிதம்
ஆனால் அடுத்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி CRR விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. CRR விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் வங்கிகளில் பணப் புழக்கத்திற்கான நிதி அளவீடு குறையும், இதனால் வங்கிகள் இந்தச் சரிவைக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் சரி செய்யும்.

4 சதவீத சிஆர்ஆர் விகிதம்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 4 மாதத்தில் அதாவது அடுத்த 2 நாணயை கொள்கை கூட்டத்தில் Cash Reserve Ratio எனப்படும் சிஆர்ஆர் விகிதத்தை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணய கொள்கை கூட்டங்கள் இரண்டு மாத இடைவேளையில் மார்ச் 27 தேதியும், மே 22 தேதியும் நடக்க உள்ளது.

வட்டி விகிதம் உயர வாய்ப்பு
சீஆர்ஆர் விகிதம் உயர்த்தப்படும் போது வங்கியிடம் வர்த்தகத்திற்கான நிதி அளவீடுகள் குறையும், இதனால் கூடுதல் வருமானத்தை பெற வேண்டும் என திட்டத்துடன் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
5 நாள் தொடர் சரிவு.. 7 மாத சரிவை தொட்ட தங்கம் விலை.. இதுதான் சரியான நேரம்..!