இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, ஏப்ரல் 9-ஆம் தேதி அன்று ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. பிப்ரவரி மாதத்திலும் 25 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதம் குறைந்தது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 8 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளன. கடன் பெற்றவர்களுக்கு இது ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது.
பொதுத் துறை வங்கிகள் ஏற்கனவே ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் தங்கள் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு திருத்தப்பட்ட வட்டி விகிதங்களில் கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. 2019-ஆம் ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு அனைத்து ஃப்ளோட்டிங் வட்டி விகிதக் கடன்களும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, அனைத்து வங்கிகளும் ரெப்போ விகித மாற்றங்களைக் கடன் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டும்.

ரிசர்வ் பேங்க் ரெப்போ விகிதத்தை குறைத்ததனால் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் சில தனியார் வங்கிகள் முழு பலன்களையும் கடன் பெறுபவர்களுக்கு வழங்கவில்லை. மாறாக தாமதம் காட்டி வருகின்றன. பொதுவாக ரிசர்வ் வங்கி ரெப்போ விதத்தை குறைக்கும் போதெல்லாம் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடன்களுக்கான வட்டியும் குறைகிறது. இந்தக் குறைப்பின் பலனை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
ஆனால் பொதுத் துறை வங்கிகள் 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதம் குறைந்ததை தொடர்ந்து கடன் வாங்குபவர்களுக்கு முழுமையான பலன்களை வழங்கி வருகின்றன. Bankbazaar.com மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 20 வருட காலத்தைக் கொண்ட ரூ.1 கோடி வீட்டுக் கடனுக்கு, வங்கிகள் 7.80 சதவீதம் முதல் 9.35 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. இந்த வட்டி விகிதம் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர், வருமானம் ஆகியவற்றைப் பொருத்தும் மாறுபடலாம்.
கனரா பேங்க்: 7.80 சதவீதம் முதல் இங்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகிறது. அனைத்து வங்கிகளையும் விட கனரா பேங்கில் வட்டி மிகக் குறைவு. தற்போது 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதக் குறைப்பு பலனை பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கனரா பேங்க் வழங்கி வருகிறது. ரூ.1 கோடி கடனுக்கான ஈஎம்ஐ தற்போது 82,404 ரூபாயாக உள்ளது.
மகாராஷ்டிரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: இந்த மூன்று வங்கிகளும் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் செய்யப்பட்ட 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதக் குறைப்பை தங்கள் அனைத்து கடன் வாங்குபவர்களுக்கும் வழங்கியுள்ளன. இந்த வங்கிகளில் வட்டி விகிதம் 7.85 சதவீதம் முதல் தொடங்குகிறது. 20 வருட கடன் காலத்தில் ரூ.1 கோடி கடனுக்கான ஈஎம்ஐ தற்போது 82,713 ரூபாயாக உள்ளது.
இந்தியன் பேங்க் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: இந்த 2 பேங்கிலும் 7.90 சதவீத வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இவை தங்கள் வங்கிகளில் வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதக் குறைப்பின் பலனை வழங்கியுள்ளன. இந்த வங்கியில் 20 வருட கால அவகாசத்துடன் ரூ.1 கோடி கடன் பெற்றால், ஈஎம்ஐ-யாக ரூ.83,023 செலுத்த வேண்டும்.
யூகோ பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: கூறப்பட்டுள்ள 5 வங்கிகளும் 8 சதவீதம் முதல் கடன்களை வழங்குகிறது. இந்த வங்கிகள் 30 முதல் 50 அடிப்படை ரெப்போ விகிதக் குறைபின் நன்மையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. 20 வருட கால அவகாசத்துடன் கூடிய ரூ.1 கோடி கடனுக்கான EMI ரூ.83,644 ஆக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications