இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தன்னுடைய டிசம்பர் மாதத்திற்கான நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது . இதன் மூலம் 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து 5.25% என குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி. இந்த ரெப்போ வட்டி விகிதத்தை பெஞ்ச்மார்க்காக கொண்டு தான் வங்கிகள் தாங்கள் வழங்கக்கூடிய வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டிகளை நிர்ணயம் செய்கின்றன . இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 1.25% வரை வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்து இருக்கின்றன. எனவே கடன் வாங்கி இருக்கக் கூடிய நபர்கள் தங்கள் வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு வட்டி குறைப்பு தொடர்பாக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வட்டி குறைப்பு என்பது இரண்டு விதங்களில் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒன்று மாதாந்திர இஎம்ஐ தொகையை குறைத்துக் கொள்வது, இல்லை என்றால் இஎம்ஐ தொகையை குறைக்காமல் கடன் செலுத்தும் காலத்தை குறைத்துக் கொள்வது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி தன்னுடைய MCLR விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதன் மூலம் 8.35 முதல் 8.60 என்ற சதவிகிதத்திற்குள் இருந்த அதன் எம்சிஎல்ஆர் விகிதம் தற்போது 8.30இல் இருந்து 8.55 என குறைந்திருக்கிறது . எனவே ஹெச்டிஎப்சி வங்கியில் எம்சிஎல்ஆர் விகிதத்தோடு இணைக்கப்பட்ட கடன்களை வாங்கி இருக்கும் நபர் அடுத்த ரீசெட் தேதியில் உங்களுக்கான வட்டி குறைகிறதா என கண்காணிக்க வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன் விகிதங்களை 8 . 35 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைத்து இருக்கிறது .டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்திருக்கிறது . எனவே ரெப்போ உடன் இணைக்கப்பட்ட வீட்டு கடன் வாங்கிய நபர்களுக்கு தானாகவே இந்த வட்டி குறைப்பு நடைமுறைக்கு வந்துவிடும்.
பேங்க் ஆப் பரோடா பெஞ்ச் மார்க் ரீடைல் கடன் விகிதங்களை 8.15 சதவீதத்திலிருந்து 7.90 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது வீட்டுக் கடன் மற்றும் பல்வேறு கடன் வாங்கிய நபர்களுக்கும் மாதாந்திர இஎம்ஐ தொகையை குறைக்கும் . இந்தியன் வங்கி ரெப்போ உடன் இணைக்கப்பட்ட பெஞ்ச் மார்க் விகிதத்தை 7.95 சதவீதமாகவும், பேங்க் ஆப் இந்தியா 8 .10 சதவீதமாகவும் குறைத்து இருக்கிறது.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா தன்னுடைய வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை 7.35 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாக குறைத்து இருக்கிறது . கார்களுக்கான கடன் விகிதங்களை 7.45 சதவீதமாக குறைத்து இருக்கிறது. இது தவிர பிராசசிங் கட்டணம் உள்ளிட்டவற்றையும் தள்ளுபடி செய்திருக்கிறது. எனவே மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டு கடன் வாங்கி இருக்க கூடிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய அடுத்த ரீசெட் தேதியில் வட்டி குறைக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications