ரூ. 30 லட்சம் வீட்டுக் கடன்களுக்கு முன்னணி வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா?

அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசை என்றால் அது தனக்கென சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதுதான். வீடு வாங்குவதற்கு பட்ஜெட் இருப்பவர்கள் மொத்த தொகையையும் செலுத்தி வாங்கி விடுவார்கள் அல்லது நிலம் வாங்கி வீடு கட்டிக் கொள்வார்கள். அதுவே பட்ஜெட் இல்லாதவர்கள் வீட்டுக் கடன்களை தான் நம்பி இருக்கின்றனர். வீட்டுக் கடன்கள் வீட்டின் விலையை பொறுத்து EMI-களாக பிரித்து கடனை திருப்பிச் செலுத்தும் விருப்பத்தை வழங்குவதால் பலருக்கும் ஹோம் லோன்கள் விருப்பமாக உள்ளன. இந்தப் பதிவில் 30 லட்சம் ரூபாய் கடன்களுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ரெப்போ விகிதம், கடன் வழங்குநரின் லாப விகிதம் மற்றும் கடன் வாங்குபவரின் கடன் தகுதி போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

 ரூ. 30 லட்சம் வீட்டுக் கடன்களுக்கு முன்னணி வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா?

2022-ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு வரை வட்டி விகிதங்கள் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது குறைவாகவே இருந்தன. இது வீட்டுக் கடன் தேவையை அதிகரித்தது. ஆனால், பணவீக்க அழுத்தம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்ததால், உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தங்கள் அடிப்படை விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

உதாரணமாக, கடந்த ஆண்டு நீங்கள் 6.50% விகிதத்தில் கடன் பெற்றிருந்தால், 2.5 சதவிகித உயர்வு ஏற்பட்டு இந்த விகிதம் 9.00% ஆக மாறி இருக்கும். அப்படியானால் வெறும் ஒரு வருடத்தில் 20% அதிகரிப்பு.

வட்டி விகிதங்களில் ஏற்படும் இந்த ஏற்றம் கடன் வாங்குபவர்களுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதனால் அதிக வட்டி செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதிக வட்டி விகிதங்கள் கடன் வாங்குவதை மிகவும் விலையுயர்ந்ததாக மாற்றுகிறது. இதன் விளைவாக EMI-களும் கடன் காலத்தின் போது உயரும். அப்படியானால் வட்டிக்கு அதிக தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

வட்டி விகிதங்கள் உயர்ந்து இருப்பதால், சிறந்த விகிதங்களைப் பெறுவதற்கு வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து வீட்டுக் கடன்களைப் பெற வேண்டும். மேலும், கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, மாதம் மாதம் EMI செலுத்த எவ்வளவு செலவாகும்? என்பதை கணக்கிடுங்கள்.

ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்கு முன்னணி வங்கிகளால் வழங்கப்படும் சமீபத்திய வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்:

ஆக்சிஸ் பேங்க்: 8.75 சதவீதம் முதல் 9.65 சதவீதம் வரை
பேங்க் ஆஃப் பரோடா: 8.40 சதவீதம் முதல் 10.60 சதவீதம் வரை
பேங்க் ஆஃப் இந்தியா: 8.40 சதவீதம் முதல் 10.85 சதவீதம் வரை
மகாராஷ்டிரா பேங்க்: 8.35 சதவீதம் முதல் 10.90 சதவீதம் வரை
கனரா பேங்க்: 8.50 சதவீதம் முதல் 11.25 சதவீதம் வரை
சென்ட்ரல் பேங்க்: 8.35 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை
DBS பேங்க்: தன்லக்ஷ்மி பேங்க்: 9.35 சதவீதம் முதல் 10.50 சதவீதம் வரை
பெடரல் பேங்க்: >=8.80 சதவீதம் வரை
HDFC பேங்க்: 8.75 சதவீதம் முதல் 9.95 சதவீதம் வரை
ஐசிஐசிஐ பேங்க்: 8.75 சதவீதம் முதல் 9.80 சதவீதம் வரை
இந்தியன் பேங்க்: 8.40 சதவீதம் முதல் 9.80 சதவீதம் வரை
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: >=8.40 சதவீதம் வரை
ஐடிபிஐ பேங்க்: 8.45 சதவீதம் முதல் 12.30 சதவீதம் வரை
ஜே&கே பேங்க்: 8.75 சதவீதம் முதல் 9.85 சதவீதம் வரை
கர்நாடக பேங்க்: 8.50 சதவீதம் முதல் 10.62 சதவீதம் வரை
கரூர் வைஸ்யா பேங்க்: 9.0 சதவீதம் முதல் 11.05 சதவீதம் வரை
கோடக் மஹிந்திரா பேங்க்: 8.70 சதவீதம் முதல் 8.95 சதவீதம் வரை
பஞ்சாப் நேஷனல் பேங்க்:8.45 சதவீதம் முதல் 10.10 சதவீதம் வரை
பஞ்சாப் & சிந்து பேங்க்: 8.50 சதவீதம் முதல் 10.0 சதவீதம் வரை
RBL பேங்க்: 8.20 சதவீதம் முதல் 14.75 சதவீதம் வரை
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: 8.50 சதவீதம் முதல் 9.65 சதவீதம் வரை
சவுத் இந்தியன் பேங்க்: 8.70 சதவீதம் முதல் 11.70 சதவீதம் வரை
தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​பேங்க்: 8.60 சதவீதம் முதல் 9.95 சதவீதம் வரை
யூகோ பேங்க்: 8.30 சதவீதம் முதல் 10.00 சதவீதம் வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 8.35 சதவீதம் முதல் 10.75 சதவீதம் வரை

மேலே கூறப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் நீங்கள் வாங்கும் தொகை மற்றும் கடன் காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம். இது 30 லட்ச ரூபாய்க்கான தோராயமான வட்டி விகிதங்களாகும். சரியான வட்டி விகிதங்களைத் தெரிந்து கொள்ள அருகில் உள்ள வங்கி கிளைகளைப் பார்வையிடவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+