சென்னை, மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் வீடு விலை அதிகரிப்பு.. உங்க நகரத்தில் எப்படி?

சொந்த வீடு என்பது பலருக்கும் தங்களது வாழ் நாள் கனவாகவே இருக்கும். எப்படியேனும் கஷ்டப்பட்டு ஒரு சிறிய வீட்டினை வாங்கினால் போதும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.

ஆனால் இந்த கனவுக்கு பெரும்பாலானவர்களுக்கும் முக்கிய தடையாக இருப்பது பணம் தான்.

அந்த கனவை இன்னும் சிக்கலாக்கும் விதமாக வீடுகளின் விலையும் உயரலாம் என ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

மூலதன செலவுகள் அதிகரிப்பு

மூலதன செலவுகள் அதிகரிப்பு

ஏற்கனவே மூலதன பொருட்கள் விலையால் கட்டுமான செலவு கணிசமாக உச்சம் தொட்டுள்ளது. இந்த நிலையில் இனியும் வீட்டு விலை அதிகரிக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

வீடுகளின் விலை அதிகரித்தால் இது மேற்கொண்டு விற்பனையில் தாக்கத்தினை ஏற்படுத்த வழிவகுக்கலாம். ஏனெனில் ஏற்கனவே வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இது மேற்கோண்டு வீட்டுக் கடனுக்கான செலவினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

மூலதன செலவுகள் அதிகரிப்பு

மூலதன செலவுகள் அதிகரிப்பு

ஏற்கனவே மூலதன பொருட்கள் விலையால் கட்டுமான செலவு கணிசமாக உச்சம் தொட்டுள்ளது. இந்த நிலையில் இனியும் வீட்டு விலை அதிகரிக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

வீடுகளின் விலை அதிகரித்தால் இது மேற்கொண்டு விற்பனையில் தாக்கத்தினை ஏற்படுத்த வழிவகுக்கலாம். ஏனெனில் ஏற்கனவே வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இது மேற்கோண்டு வீட்டுக் கடனுக்கான செலவினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

5% வரையில் விலை அதிகரிப்பு

5% வரையில் விலை அதிகரிப்பு

ஆய்வின் படி இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் மூலதன செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் வலுவான தேவை காரணமாக விலை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் சராசரியாக வீட்டு விலைகள் கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளது என சொத்து தரகு நிறுவனமான PropTiger.com தெரிவித்துள்ளது.

வீடுகள் விலை எப்படி?

வீடுகள் விலை எப்படி?

இதற்கிடையில் இனியும் வீட்டு விலை அதிகரிக்கலாம் என்பது,வீடு வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு மேற்கோண்டு கடினமான ஒரு விஷயமாக இருக்கலாம்.

சராசரியாக முதல் நிலை சந்தைகளில் வீடுகள் விலையானது செப்டம்பர் காலாண்டில் சராசரியாக ஒரு சதுர அடிக்கு 6600 - 6800 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 6300 - 6500 ரூபாயாக இருந்தது.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

ஆஸ்திரேலியாவின் REA குழுமம் மற்றும் அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்ட நியூஸ் கார்ப், REA இந்தியா, Housing.com, proptiger மற்றும் Makaan.com உள்ளிட்ட போர்ட்டல்களை வைத்துள்ளது.
நாங்கள் முதன்மை வீட்டு சந்தைகளில் மிதமான விலை உயர்வினை பார்க்கிறோம். சிமெண்ட் மற்றும் ஸ்டீல் போன்ற முக்கிய மூலதன பொருட்களின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவே இந்த விலை அதிகரிப்புக்கும் காரணம் என தெரிவித்துள்ளது.

கொரோனாவும் ஒரு காரணம்

கொரோனாவும் ஒரு காரணம்

மூலதன பொருட்கள் விலை மட்டும் அல்ல, கொரோனாவிற்கு பிறகு தேவையானது மிக வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இது மேற்கொண்டு விலையை அதிகரிக்க தூண்டியுள்ளது. மேலும் கொரோனா காலங்களில் வீடு விற்பனையானது குறைவாக இருந்த நிலையில், அதுவும் விலையை அதிகரிக்க தூண்டியுள்ளது.

மொத்தத்தில் வரவிருக்கும் காலாண்டுகளில் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதம், வலுவான தேவை, உள்ளிட்டவற்றின் மத்தியில், கட்டுமான செலவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக முக்கிய கட்டுமான பொருட்கள் விலையானது உச்சத்தில் உள்ளது. இது மேற்கொண்டு விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

அகமதாபாத் & பெங்களூர்

அகமதாபாத் & பெங்களூர்

அகமதாபாத்தில் வீடு விலையானது செப்டம்பர் காலாண்டில், ஒரு சதுர அடிக்கு விலை, 5% அதிகரித்து, 3600 - 3800 ரூபாயாக அதிகரிக்கலாம். இது கடந்த ஆண்டில் 3400 - 3600 ரூபாயாக இருக்கலாம்.

இதே பெங்களூரில் வீடுகளின் விலையானது 6% அதிகரித்து, ஒரு சதுர அடிக்கு 5900 - 6100 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக ஒரு சதுர அடிக்கு 5500 - 5700 ரூபாயாக உச்சம் எட்டியது.

சென்னை & டெல்லி

சென்னை & டெல்லி

சென்னையில் ஒரு சதுர அடிக்கு 2% அதிகரித்து, 5500 - 5700 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 5400 - 5600 ரூபாயாக இருந்தது.

இதே டெல்லி என்சிஆரில் ஒரு சதுர அடிக்கு 5% விலை அதிகரித்து, 4700 - 4900 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 4400 - 4600 ரூபாயாகவும் இருந்தது.

ஹைத்ராபாத் & கொல்கத்தா

ஹைத்ராபாத் & கொல்கத்தா

ஹைத்ராபாத்டில் ஒரு சதுர அடிக்கு விலை 4% அதிகரித்து, 6100 - 6300 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 5900 - 6100 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே கொல்கத்தாவில் விலை 3% வரையில் அதிகரித்து, 4400 - 4600 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 4300 - 4500 ரூபாயாக இருந்தது.

மும்பை & புனே

மும்பை & புனே

மும்பையில் ஒரு சதுர அடிக்கு 3% விலை அதிகரித்து, 9900 - 10,100 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 9700 - 9900 ருபாயாக இருந்தது.

இதே புனேவில் 7% விலை அதிகரித்து, ஒரு சதுர அடிக்கு, 5500 - 5700 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 5100 - 5300 ரூபாயாக இருந்தது.

பணவீக்கம்

பணவீக்கம்

தொடர்ந்து பணவீக்க விகிதம் அதிகரித்து வரும் நிலையில், ரெடி டூ மூவ் வீடுகள் விலையானது கணிசமாக அதிகரித்துள்ளன. இதே அனராக் 8 நகரங்களில் 1656 ஏக்கர் நிலப்பரப்புள்ள ஒப்பந்தங்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹைத்ராபாத் இந்த ஒப்பந்தத்தில் பெரியளவிலான பரிவர்த்தனையை செய்துள்ளது என அனராக் குழுமம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் அனைத்து முன்னணி முக்கிய நகரங்களிலும் கடந்த ஆண்டினை காட்டிலும் ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ளது. இது தேவையானது வலுவாக காணப்படும் நிலையில் செய்யப்பட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+