2023 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் இந்தியாவில் பெரும்பாலான நகரங்கள், வர்த்தக பகுதிகள், தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருக்கும் வீடுகளின் வாடகை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதிலும் முக்கியமாக பெங்களூர், மும்பை, நொய்டா, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களில் 10 முதல் 30 சதவீதம் வரையில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது.
இந்த வீட்டு வாடகை உயர்வால் மாத சம்பளக்கார்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முக்கியமாக வொர்க் ப்ரம் ஹோம் முடிந்து அலுவலகத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என பல நிறுவனங்கள் கண்டிப்பான முறையில் கூறிய பிறகு பெரு நகரங்களுக்கு குடும்பத்துடன் குடியேற திட்டமிடுவோர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலைக்கு முக்கியமானமாகவும் வொர்க் ப்ரம் ஹோம் தான் உள்ளது. வீட்டின் வாடிகை அதிகமாக இருக்கும் காரணத்தால் பலர் சொந்த வீட்டை வாங்க முடிவு செய்துள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் அதிகப்படியான வீடுகள் நாடு முழுவதும் கட்டப்பட்ட நிலையில்,அதிகளவிலானவை விற்பனையைாகமல் தேக்கமடைந்தது.
வொர்க் ப்ரம் ஹோம் சலுகை நிறுத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் இருந்து 2022 ஆம் ஆண்டு இறுதியில் விற்பனையாகமல் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு சரிவை எட்டியுள்ளது என ANAROCK தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் வேலியாக கருதப்படும் பெங்களூரிவில் சில ஹவுசிங் சௌசைட்டியில் கொரோனாவுக்கு முந்தை அளவீட்டை காட்டிலும் வீட்டு வாடகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வீட்டு வாடகை உயர்வில் இந்தியாவின் டாப் 7 நகரங்களில் பெங்களூர் முதல் இடத்தில் உள்ளது.
இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்?: 2023 ஆம் ஆண்டு துவக்கம் முதல் பல்வேறு காரணங்களுக்காக வர்த்தகம் மந்தமடைய துவங்கியது இதனால் ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கொடுத்திருந்த வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்தது.
இதேபோல் குழந்தையை முதன் முதலில் பள்ளியில் சேருக்கும் பெற்றோர்களும் 2022 அக்டோபர் மாதமே சொந்த ஊரில் இருந்து தாங்கள் பணியாற்றும் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். இப்படி மெல்ல மெல்ல அதிகரித்த புதிய குடிபெயர்வுகள் வொர்க் ப்ரம் ஹோம் சலுகை முடிந்த உடன் அதிகரிக்க துவங்கியது.
பிரச்சனை: 2023ல் வந்தவர்களுக்கு போதுமான வீடுகள் கிடைக்காத காரணத்தால் அதிகப்படியான வாடகைக்கு செல்ல துவங்கினர். இதனால் ஒட்டுமொத்த வீட்டு ஓனர்களும் டிமாண்ட்-ஐ புரிந்துக்கொண்டு வாடகையை உயர்த்த துவங்கினர். அதுவும் பிரபலமான அப்பார்ட்மென்ட் எனில் சொல்லவே வேண்டும்.
தீர்வு: இந்த அதிகப்படியான வாடகை பிரச்சனையை சமாளிக்க சிலர் சொந்த வீட்டை வாங்கி குடியேற முடிவு செய்துள்ள நிலையில் பலர் சிட்டிக்கு வெளியில் அதாவது தொலைவில் வாடகை வீட்டை எடுத்துள்ளனர். இதனால் வீட்டு வாடகை குறைந்தாலும் பயண செலவுகளும், பயண நேரமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications