கோடீஸ்வர பிச்சைக்காரர்.. ரூ.5 கோடி மதிப்புடைய வீடு, மாதம் 1.27 லட்சம் வருமானம்.. யாரு சாமி நீ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் தினமும் பல இடங்களில் பார்க்கப்படும் பிச்சைக்காரர்கள் யாரும் உண்மையில் பிச்சைக்காரர்கள் இல்லை அவர்கள் கோடீசுவரர்கள் என்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்.

 

ஆம் இப்படிப்பட்ட சம்பவம் தான் லண்டனில் நடந்துள்ளது.

லண்டன்

லண்டன்

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை வைத்துக்கொண்டு, மாதம் லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை மட்டுமே பெற்றுக்கொண்டு ஒருவர் சாலையோரம் வீடு வாசல் இல்லாதவர்கள் போல் தங்கியுள்ளார்.

Taboo Room இண்டர்வியூவ்

Taboo Room இண்டர்வியூவ்

இவருடைய இண்டர்வியூவ் தான் தற்போது ஒட்டுமொத்த இண்டர்நெட்-ஐ கலக்கி வருகிறது. லண்டனில் Taboo Room என்ற நிகழ்ச்சியில் பேசிய டாம் என்பவர் தனதுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 1300 பவுண்ட் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.27 லட்சம் ரூபாய் வாடகை வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பம்
 

மிடில் கிளாஸ் குடும்பம்

டாம் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தவர், பள்ளியில் பின்தங்கிய மாணவராக இருந்தாலும், விளையாட்டு மூலம் ஸ்காலர்ஷிப் கிடைத்து கல்லூரிக்குச் சென்றுள்ளார். ஆனால் அவருடைய இளமை பருவ சுதந்திரம் அவருடைய வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 மதுபானம், போதை பொருள்

மதுபானம், போதை பொருள்

இளம் பருவத்திலேயே மதுபானம், போதை பொருள் எனப் பல தவறான பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும், 13 வயதிலேயே கஞ்சாவும். 17-18 வயதில் ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கை தலைகீழாக மாறியது என அறிவித்துள்ளார்.

மறுவாழ்வு மையம்

மறுவாழ்வு மையம்

மறுவாழ்வு மையத்திற்குச் சென்ற பிறகு, ஏழு வருடங்களாக வாழ்க்கையில் மெல்ல மெல்ல நகர்ந்து வந்தாலும் இந்தப் பழகத்தில் முழுமையாக வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளார்.

தினமும் 200 - 300 பவுண்ட்

தினமும் 200 - 300 பவுண்ட்

இந்த நிலையில் டாம் தினமும் 200 - 300 பவுண்ட் பிச்சை எடுத்து சம்பாதிப்பதாகவும், வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் பணத்தையும் அதை முழுவதும் போதை பொருள் வாங்குவதற்காகப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாலையில் வசிக்கும் டாம்

சாலையில் வசிக்கும் டாம்

போதை பொருட்களுக்கு அதிகமாக அடிமையானதால் ஒவ்வொரு இரவும் வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் ஸ்டேஷன் வெளியில் தூங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

சொந்த வீடு

சொந்த வீடு

டாம் முதல் மகன் பிறந்த போது அவருடைய தந்தை மனைவி, பிள்ளைகள் வாழ்வதற்காக இந்த வீட்டை வாங்கிக் கொடுத்ததாகவும், தற்போது இந்த வீட்டின் மதிப்பு 5,30,000 பவுண்டாக உள்ளது, ஆனால் என்னுடைய போதை பழக்கம் தொடர்ந்தால் இந்த வீட்டையும் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும் என வருத்தப்படுக்கிறார் டாம்.

யாருமே இல்லை

யாருமே இல்லை

தற்போது அவருக்கு ஆதரவாக அவரது குடும்பம், நண்பர்கள் என யாருமே இல்லை எனப் புலம்புகிறார். போதை பொருள் ஒருவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதற்குப் பெரிய உதாரணமாக விளங்குகிறது.

பணக்கார பிச்சைக்காரர்கள்

பணக்கார பிச்சைக்காரர்கள்


இந்தியாவிலும் பல பணக்கார பிச்சைகார்களை நாம் பார்த்து உள்ளோம், இவர்கள் அனைவரும் சீரியாகப் பணம் சம்பாதித்துச் செட்டிலாக வேண்டும் என்பதற்காகப் பிச்சை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணக்கார பிச்சைக்காரர்கள் எனப் பட்டியலிட்ட பலருக்கு சொத்து வீடு, வங்கிக் கணக்கில் அதிகளவிலான பணம் இருந்ததைப் பார்த்தோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HOMELESS man owns property worth Rs 5 crore, earns 1.27 lakh as monthly rent but lives on STREET

HOMELESS man owns property worth Rs 5 crore, earns 1.27 lakh as monthly rent but lives on STREET
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X