இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் சந்தை வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளுக்கான தேவையும் அவற்றை விரும்பி வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடுகளின் விற்பனை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக செய்தி வெளியாகியது.

ஜேஎல்எல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட 49 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன என தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இவற்றின் மதிப்பு 7,500 கோடி ரூபாய் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. முன்பெல்லாம் இந்தியாவில் தனி பங்களாக்களை வாங்குவதற்கு தான் அதிக டிமாண்ட் இருந்ததாம், ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர குடியிருப்புகளுக்கான சந்தை வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கிறது.
வீடு வாங்குவோரின் போக்கு மாறி இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2025ஆம் ஆண்டிலும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட வீடுகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. 2025 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் இரண்டு மாத காலத்தில் மட்டும் இவ்வாறு நூறு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்டு நான்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 850 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட 49 வீடுகளில் 65 சதவீதம் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்த வீடுகள் என தெரிய வந்துள்ளது, பங்களாக்கள் 35 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி வரை மதிப்பு கொண்ட வீடுகளும் அடுக்குமாடி குடியிருப்புகளும் கூட தற்போது அதிகம் விற்கப்படுவதாக இந்த அமைப்பு கூறுகிறது. இதுபோன்ற அதிக விலை கொண்ட குடியிருப்புகள் அதிகபட்சமாக மும்பை மற்றும் டெல்லி என்சிஆர் ஆகிய பகுதிகளில் தான் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இருப்பவர்கள், திரையுலக பிரபலங்கள் ,ஸ்டார்ட் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் தான் இதுபோல 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடுகளை வாங்குவதாக ஜேஎல்எல் நிறுவனத்தின் தலைவர் சிவ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 49 ஆடம்பர வீடுகளில் 69 சதவீத வீடுகள் மும்பையில் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன .இந்த பட்டியலில் டெல்லி என்சிஆர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.மும்பையில் மலபார் ஹில்ஸ் மற்றும் வோர்லி ஆகிய பகுதிகளில் அதிக மதிப்பு கொண்ட வீடுகள் விற்பனை ஆகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications