பொதுவாக கார் விரும்பிகள் மத்தியில் ஹோண்டா கார்களுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு, அதற்கு முக்கியமான காரணம் ஹோண்டா கார்களின் இன்ஜின் தரம். இன்றும் முக்கியம சாலைகளில் 15 வருட பழைய ஹோண்டா கார்களும் சிறப்பாக இயங்குவதை பார்க்க முடியும். ஆனால் கடந்த சில வருடங்களாக புதிய கார்களை இந்திய சந்தைக்கு ஏற்றார் போல் அறிமுகம் செய்யாத காரணத்தால் மந்தமான வர்த்தகத்தை பெற்று வருகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெரிய அளவிலான வளர்ச்சியை நோக்கிய பயணித்துக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த சாதகமான வர்த்தக சூழ்நிலையில் ஹோண்டா விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் புதிய Honda Elevate என்னும் SUV கார்-ஐ இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் இது SUV காலம் என்பதாலும், புதிய கார் வாங்குவோர் அனைவரும் அடுத்தது என்ன கார் வருகிறது என்பதை தீவிரமாக கண்காணிக்க துவங்கியதாலும் Honda Elevate SUV கார் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் அறிவிப்பு படி இன்று காலை 12 மணிக்கு Honda Elevate SUV அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Honda Elevate SUV மாடல் கார் இந்தியாவில் தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, இதனாலேயே World premier என வெளியீட்டு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளது. பொதுவாக வெளிநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட கார்கள் இந்திய சந்தையில் பல்வேறு மாற்றங்களை செய்து இந்திய சந்தைக்கு ஏற்றவாறு அறிமுகம் செய்யும். ஆனால் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி கார் இந்தியாவில் தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது என தெரிகிறது.
ஹோண்டா சிட்டி, ஹோண்டா அமேஸ் வெற்றி வரிசையில் தப்போது ஹோண்டா எலிவேட் எஸ்யூவி கார் பிரிவில் மூன்றாவது வளர்ச்சி தூண் ஆக இருக்கும் இருக்கும் என வெளியீட்டு நிகழ்ச்சியில் ஹோண்டா கார்ஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மேலும் இந்த கார் மூலம் ஹோண்டா நிறுவனம் தான் இழந்த வர்த்தகத்தை மீண்டும் பெறுவது மட்டும் அல்லாமல் ஹோண்டா ரசிகர்களையும் குளிர்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா எலிவேட் எஸ்யூவி கார் 10 லட்சம் முதல் 17 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி கார் தற்போது சந்தையில் இருக்கும் Hyundai Creta, Kia Seltos, Maruti Suzuki Grand Vitara, Skoda Kushaq, Volkswagen Taigun மற்றும் MG Astor ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரில் தற்போது இந்திய சாலைகளில் அசத்தும் செடான் மாடலான ஹோண்டா சிட்டி கார் இன்ஜின் கொண்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 2030க்குள் இந்தியாவில் 5 எஸ்யூவி கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், 2040க்குள் எலக்ட்ரிக் மற்றும் பியூயல் செல் கார்களை விற்பனை செய்ய உள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
புதிய ஹோண்டா எலிவேட் காரின் டிசைன் எப்படி இருக்கு..? கமெண்ட் பண்ணுங்க..!


Click it and Unblock the Notifications