சென்னை: இந்திய ஆட்டோமொபைல் துறையில் பிரபல ஹோண்டா நிறுவனம் முதன்முறையாக இந்திய சந்தையில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆக்டிவா பிராண்டின் மின்சார வாகனங்களை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் நுழைந்துள்ளது. அதன் புகழ்பெற்ற ஆக்டிவா பிராண்டின் கீழ் முதன்முறையாக ஆக்டிவா இ (Activa e)என்ற மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்தோடு கியூசி 1 (QC1) என்ற மற்றொரு மின்சார இரு சக்கர வாகனமும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவாவை பொறுத்தவரை 6 கிலோ வாட் பீக் பவர் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனமானது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் 7.3 செகன்ட்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்டிவா மின்சார வாகனத்தை பொறுத்தவரை Econ, Standard, Sport என மூன்று ரைட்டிங் மோட்களை கொண்டிருக்கும்.
அதுமட்டுமின்றி இரண்டு மாற்றக் கூடிய ஹோண்டா மொபைல் பவர் பேக் இ பேட்டரிகளை(swappable Honda Mobile Power Pack e batteries ) கொண்டுள்ளது.இதுதான் இந்த இருசக்கர வாகனத்தின் முக்கிய சிறப்பம்சம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு பேட்டரிகளும் 1.5 kWh திறன் கொண்டது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 102 கிலோமீட்டர் தூரம் வரை இதில் பயணம் செய்ய முடியுமாம்.
ஹோண்டா ஆக்டிவா Activa e மற்றும் Activa e: Honda RoadSync Duo என இரண்டு வகைகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில் Activa e: Honda RoadSync Duo 7.0 அங்குல டச் ஸ்கிரீனுடன் வருகிறதாம். இதில் மேப் உள்ளிட்ட வசதிகளையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
ஹேண்டில்பாரில் உள்ள டாக்கில் ஸ்விட்ச்களை கொண்டு இந்த ஸ்கிரீனை எளிதாக ஆபரேட் செய்ய முடியும்.ஹோண்டாவின் H-Smart key வசதியும் இந்த வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனமானது ஐந்து நிறங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
அடுத்ததாக ஹோண்டா க்யூசி1, ஒரே ஒரு பேட்டரி கொண்டிருக்கிறது . இது 1.5 kWh பேட்டரி பேக்கையும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் வகையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. நான்கு மணி நேரம் 30 நிமிடங்களில் இந்த பேட்டரி பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகுமாம். ஆறு மணி நேரம் 50 நிமிடங்களில் இது 100 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது. இந்த வாகனத்தில் 5.0 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே இருக்கிறது. 26 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் உடன் இது கிடைக்கிறது.
ஹோண்டாவின் இந்த இரண்டு மின்சார வாகனங்களும் மூன்று ஆண்டுகள் அல்லது ஐம்பதாயிரம் கிலோ மீட்டர் வாரன்டியுடன் வருகிறது. முதல் ஆண்டில் மூன்று முறை இலவச சர்வீஸ் செய்து தரப்படும் என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2025 முதல் இது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி பிரச்சனையை தீர்ப்பதற்காக ஹோண்டா ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது .இதன்படி பேட்டரிகளை ஸ்வாப்பிங் செய்து கொள்ளும் வசதியை கொண்டு வருகிறது. அதாவது பேட்டரியை மாற்றிக் கொள்ளும் நிலையங்களை அமைக்க போவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையங்களுக்கு சென்று நாம் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வாங்கிக்கொண்டு நம்மிடம் இருக்கும் பேட்டரியை ஸ்வாப்பிங் மையத்திடம் வழங்கி விடலாம்.


Click it and Unblock the Notifications