உலகளாவிய ஆட்டோமொபைல் துறையின் ஆதிக்க நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஜப்பான் நாட்டின் ஹோண்டா மோட்டார் நிறுவனம் மற்றும் நிசான் மோட்டார் நிறுவனம் இணைந்து செயல்பட ஒரு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்கும் திட்டங்களைத் தொடங்கியுள்ளன. ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சீனாவாலும், சீன நிறுவனங்களாலும் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை குட்ரிட்டன்ஸ் தளத்தில் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டு உள்ளோம்.
இந்த நிலையில் ஹோண்டா மோட்டார் நிறுவனம் மற்றும் நிசான் மோட்டார் நிறுவனம் இணைந்து செயல்படும் முடிவை எடுத்திருக்கும் வேளையில், சென்னை நிசான் தொழிற்சாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹோண்டா மற்றும் நிசான் தனது விற்பனை சரிவில் இருந்து மீண்டு லாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் என்பதற்காகவே இந்த மாபெரும் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த இணைப்பின் மூலம் இக்கூட்டணியின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், அதிகரித்து வரும் தொழில்துறை சவால்களை திறம்பட எதிர்கொள்ளவும் உருவாக்கப்படுகிறது.
இந்த இணைப்பு வெற்றிகரமாக முடிய அனைத்து தடைகளும் உடைக்கப்படும் என ஜப்பான் ஆட்டோமொபைல் வட்டாரங்கள் கூறப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் விற்பனை அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய கார் தயாரிப்பாளராக ஹோண்டா மற்றும் நிசான் உருவெடுக்கும். முதல் இரண்டு இடத்தில் டொயோட்டா மற்றும் வோக்ஸ்வாகன் ஆகிய நிறுவனங்கள் இருக்கும்.
ஹோண்டா மற்றும் நிசான் இணைப்பு உலகளாவில் பல நன்மைகள் இருந்தாலும், இந்திய சந்தைக்கு ஒரு திக்கல் உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா மற்றும் நிசான் இரண்டு நிறுவனங்களும் சிறிய அளவிலான வர்த்தகத்தை மட்டுமே வைத்துள்ளது.
வருடம் 40 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்படும் இந்திய சந்தையில் ஹோண்டா வெறும் 1.39% சந்தைப் பங்கை மட்டுமே கொண்டுள்ளது, அதேசமயம் நிசான் வெறும் 0.73% சந்தைபங்கீட்டை மட்டுமே கொண்டு உள்ளது. இந்தியாவில் ஹோண்டா கார் தொழிற்சாலை தனிப்பட்ட முறையில் ஹோண்டாவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது, அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நிசான் அப்படியில்லை.
நிசான் நிறுவனம் சென்னை அருகே உள்ள ஓராகடத்தில் மாபெரும் தொழிற்சாலையில் தனது கார்களை தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த தொழிற்சாலையை நிசான் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தவில்லை, இதற்கு மாறாக ரெனோ உடன் இணைந்து நடத்தி வருகிறது.
வருடத்திற்கு 400,000 கார்களை தயாரிக்கும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை ஹோண்டா மற்றும் நிசான் இணைப்புக்கு பின்பு எப்படி கையாளப்படும் என்பது தான் தற்போதைய கேள்வி. நிசான் தனது கூட்டணியை உடைக்குமா அல்லது ஹோல்டிங் கம்பெனி உருவாக்கப்படுவதால் இந்த கூட்டணியின் கீழ் இயங்கி ஹோண்டா கார்களையும் இத்தொழிற்சாலையில் தயாரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிசான் சென்னை 2010 ஆம் ஆண்டு ஓராகடம் தொழிற்சாலை தொடங்கப்பட்டதிலிருந்து, 27.5 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை தயாரித்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் விற்பனை செய்துள்ளது.
ரெனோ மற்றும் நிசான் இடையேயான கூட்டணி இன்னும் லாபகரமானதாக மாறவில்லை என்ற கருத்து இருக்கும் வேளையில் ஹோண்டா - நிசான் இணைப்பு செய்தி வெளியாகியுள்ளது. நிசான் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2024 நிதியாண்டில் 10% குறைந்துள்ளது, அதேசமயம் ரெனோவும் இந்தியாவில் தனது கார்களை விற்க போராடி வருகிறது.
ஹோண்டா-நிசான் இணைப்பில் ரெனோவின் ஈடுபாடு தெளிவற்ற நிலையில் இருப்பதால், ஓராகடம் தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications