இந்தியாவில் பல வெளிநாட்டுக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் இருந்தாலும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா கார்களுக்கும், பைக்குகளுக்கும் தனி இடம் மக்கள் மனதில் உண்டு.
கொரோனா காலத்தில் ஹோண்டா வாகனங்களின் விற்பனை அளவில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருந்தாலும், தொடர்ந்து டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் ஹோண்டா உள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தால் நாடு முழுவதும் மாநில அரசுகள் அடுத்தடுத்து லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்து வருகிறது. இதனால் வர்த்தகச் சந்தையும் சரிவிலிருந்து முழுமையாக மீண்டு வர துவங்கியுள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி
இந்தச் சூழ்நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது கார் மற்றும் பைக் விலையை உயர்த்தி வருகிறது. ஏற்கனவே ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனம்
தற்போது ஹோண்டா நிறுவனம் தான் உற்பத்திக்காகக் கொள்முதல் செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல் கார் மற்றும் பைக்குகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
சிட்டி மற்றும் அமேஸ் கார்
ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி மற்றும் அமேஸ் கார்களுக்கு இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் இக்கார்களின் விலை அடுத்த மாதம் முதல் உயர உள்ளதாக இந்நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலோகங்கள் விலை
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மார்கெட்டிங் பரிவின் உயர் துணைத் தலைவரான ராஜேஷ் கோயல் கூறுகையில், ஸ்டீல், அலுமினியம் மற்றும் இதர முக்கிய உலோகங்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
குறிப்பாகச் சில உலோகங்கள் வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ளது. இதனால் கார்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications