பெங்களூரு: ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் பெங்களூருவில் மின்சார வாகன உற்பத்திக்கான ஆலையை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி சந்தை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்
கொண்டு தங்களுடைய மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் உலக அளவில் மோட்டார் சைக்கிள் பிரிவில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்திய சந்தையில் மின்னணு வாகன உற்பத்தியில் கால் பதிக்க
இருப்பதாக அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்குள் சுமார் 20 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து விட வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயம் செய்து அதனை நோக்கி பயணம் செய்து வருகிறது ஹோண்டா.

உலக அளவில் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களில் சுமார் 40% ஹோண்டாவின் வாகனம் தான் . இந்தியா ,இந்தோனேசியா ,தாய்லாந்து, உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு தான் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 85 சதவீதம் ஆசிய நாடுகளில் தான் விற்பனையாகிறது. மீதமுள்ள வாகனங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டில் ஹோண்டா நிறுவனம் கிட்டத்தட்ட 37 நாடுகளில் தங்களுடைய வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் தங்களுடைய வாகன விற்பனையை 50 முதல் 60 மில்லியன் என உயர்த்த ஹோண்டா நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக குளோபல் சவுத் என்ற திட்டத்தை தொடங்கி புதுப்புது மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக ஹோண்டா மோட்டார் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை
நிறுவுவதாக தெரிவித்துள்ளது. 2028 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் அண்மையில் தான்
ஆக்டிவாவில் மின்சார இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்தது.
இந்தியாவில் அமைக்கப்படும் இந்த உற்பத்தி ஆலையில் மின்சார இருசக்கர வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது. தற்போது கர்நாடக மாநிலம் நரசிபுரா பகுதியில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவி ஆக்டிவா மின்சார வாகனத்தை தயார் செய்கிறது.
இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தில் சுமார் 30 மின்சார இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. தற்போதைக்கு ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யும் வாகனங்களில் சுமார் 4 மில்லியன் வாகனங்கள் இருசக்கர வாகனங்களாக இருக்கின்றன.
2030ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களில் 50% தங்கள் நிறுவனத்தின் வாகனமாக இருக்க வேண்டும் என ஹோண்டா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
Story Written By: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications