அதானி-ஹிண்டன்பர்க் ரிசர்ச் சம்பவம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கருப்புப் பக்கமாக மாறி வரும் வேளையில் அதானி குழுமத்தில் கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானி செய்த பல விஷயங்கள் வெளியாகி முதலீட்டாளர்களைக் கலங்கடித்துள்ளது.
இதன் வாயிலாக 120 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்த கௌதம் அதானி தற்போது போர்ப்ஸ் பட்டியலில் வெறும் 33 பில்லியன் டாலர் உடன் சொத்து மதிப்புடன் உள்ளார்.
இதேபோன்ற சம்பவம் தற்போது ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு நடந்துள்ளது. ஷாட் செல்லிங் மூலம் அதிகப்படியான லாபம் பெற முடியும் என்பதைத் தாண்டி ஒரு நிறுவனம் செய்தும் தவறுகளைக் கண்டறிந்து அதன் மூலம் ஷாட் செல்லிங் செய்து லாபம் பார்க்கும் நிறுவனங்கள் எக்கச்சக்கமாக உள்ளது.
Jehoshaphat Research நிறுவனம்
அப்படி Jehoshaphat Research என்னும் ஷாட் செல்லிங் நிறுவனம் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் கோ என்ற நிறுவனம் குறித்து 60 பக்க ரிப்போர்ட்-ஐ வெளியிட்டது. இதன் வாயிலாகக் கடந்த ஒரு வாரத்தில் டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் கோ சுமார் 33000 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளது.
ஹாங்காங்
ஹாங்காங் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு கோடீஸ்வரர் தனது நிகர மதிப்பு இரண்டு நாட்களில் 670 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்துள்ளார். இதற்குக் காரணம் Jehoshaphat Research என்னும் ஷாட் செல்லிங் நிறுவனத்தின் 60 பக்க அறிக்கை தான். இதே தான் அதானி குழுமத்திற்கும் நடந்தது.
டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் கோ
ஜெர்மன் கோடீஸ்வரர் ஹார்ஸ்ட் ஜூலியஸ் புட்வில் என்பவரால் டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் கோ நிறுவப்பட்டது, கடந்த வாரம் பெரிய அளவில் பிரபலம் இல்லாத ஷாட் செல்லிங் நிறுவனமான Jehoshaphat Research வெளியிட்ட அறிக்கையில் இந்நிறுவனம் லாபத்தைக் கையாண்டதாகவும், கணக்கியல் மோசடிகள் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியது.
33000 கோடி ரூபாய் இழப்பு
இந்த அறிக்கை வெளியான ஒரு வாரத்தில் டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 4 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை எதிர்கொண்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 33000 கோடி ரூபாய்க்கு மேல்.
19% சரிவு
Jehoshaphat Research அறிக்கை வெளியானதில் இருந்து டெக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்குகளில் 19% சரிவைக் கண்டது, நவம்பர் 2008 க்குப் பின்பு பெரும் சரிவாகும். இந்த அறிக்கையில் இந்நிறுவனம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் போலி கணக்கியல் மூலம் அதன் லாபத்தை வியத்தகு முறையில் உயர்த்தி வருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது.
டெக்ட்ரானிக் நிறுவனம் அறிக்கை
இந்த நிலையில் வழக்கம் போல் டெக்ட்ரானிக் நிறுவனம் இந்த 60 பக்க அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளது மற்றும் ஷாட் செல்லர் நிறுவனமான Jehoshaphat Research எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.
Horst Julius Pudwill-ன் சொத்து மதிப்பு
2023 ஆம் ஆண்டில் மட்டும் Hang Seng Index-ல் இருக்கும் டெக்ட்ரானிக் நிறுவன பங்குகள் 9.6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, கடந்த ஒரு வாரத்தில் 19 சதவீதம் சரிந்து வெள்ளிக்கிழமை கணிசமாக உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் Horst Julius Pudwill-ன் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications