இந்தியாவில் சீன பிராண்டுகளுக்கும், சீன நிறுவனங்களுக்கும் பெரிய அளவிலான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த போன் பிராண்டுகளில் ஒன்றான ஹூவாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Honor தனது விற்பனை, வர்த்தகத்தை மொத்தமாக முடக்கியது.
இந்த நிலையில் Honor மீண்டும் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக தனது புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து களத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சீனாவின் ஹூவாய் நிறுவன பொருட்கள் மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் தான் Honor வெளியேறியேறியது. தற்போது மீண்டும் இந்திய வர்த்தக சந்தைக்குள் வரும் காரணத்தால் தேவையான ஒப்புதல் பெற்று இருக்கும் என நம்பப்படுகிறது.

நொய்டாவில் இருக்கும் PSAV குளோபல் நிறுவனத்துடனான 3 வருட கூட்டணிக்கும் பின்பு இந்தியாவில் போதுமான விநியோக கட்டமைப்பை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Honor 90 மாடல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
Honor இந்தியாவில் அறிமுகத்திற்காக புதிய அணியை சேர்த்துள்ளது, குறிப்பாக ரியல்மீ நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்க்கப்பட்டு உள்ளது, இதில் முக்கியமாக ஜூன் மாதம் ரியல்மீ நிறுவனத்தின் பிஸ்னஸ் மற்றும் கார்பரேட் ஸ்டார்டஜி பிரிவின் துணை தலைவரான மாதவ் சேத் Honor நிறுவனத்தின் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.
Honor வருகை குறித்து இந்நிறுவனம் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு வருகிறது, இதேபோல் மாதவ் சேத்-ம் சில பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.
Honor இந்திய சந்தைக்குள் முழு வீச்சில் இறங்கினால் ஸ்மார்ட்போன் விற்பனையில் பெரும் மாற்றம் ஏற்படும், குறிப்பாக சாம்சங், ஓன்பிளஸ்-க்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications