அமெரிக்கா ஈரான் மத்தியிலான போர் தாக்குதல் குறைந்துவிட்டாலும், இன்னும் பதற்றம் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு ஈரான் போர் மீதான டிரம்ப்-ன் நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் உருவானது.
ஆனால் இன்றும் ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்காவின் கடற்படை முடக்கம் இருந்து வருகிறது, ஈரான் அறிவித்த கப்பல் போக்குவரத்து தடை தொடர்கிறது. இதனால் ஹார்முஸ் வழித்தடம் இன்னும் முழு பயன்பாட்டு அளவுக்குத் திரும்பவில்லை.

ஈரான் ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹார்முஸ் வழித்தடத்தில் அனுமதி இல்லாமல் சென்ற கப்பல், கடல் கண்ணிவெடி மூலம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசும், ராணுவமும் ஹார்முஸ் வழித்தடத்தில் இந்தியா, சீனா, ஈராக், கத்தார் நாட்டின் கப்பல்கள் இயக்க முழுமையான அனுமதி கொடுத்திருக்கும் வேளையில், மற்ற நாட்டின் கப்பல்கள் அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆயினும் பல கப்பல்கள் அனுமதி இல்லாமலும், திட்டமிட்ட பாதையில் செல்லாமல் மாற்றுப் பாதையில் சென்று வருவதால் ஈரான் கடற்படை ஏற்கனவே வைத்த கடல் கண்ணிவெடிகள் மீது மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது. இப்படி ஒரு சம்பவம் தான் இன்று நடந்துள்ளது.
பிப்ரவரி மாதம் அமெரிக்கா - ஈரான் போர் துவங்கிய நாளில் இருந்து ஈரான் ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தில் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களை கடல் கண்ணி வெடிகள், ரோந்து கப்பல்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்கி இவ்வழித்தடத்தை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாகவே அமெரிக்க கடற்படை தனது போர் கப்பல் கொண்டு ஈரான் துறைமுகத்தை மொத்தமாக முடக்கியுள்ளது.
இதேவேளையில் அமெரிக்க ராணுவம் பல முறை ஹார்முஸ் வழித்தடத்தில் கடல் கண்ணிவெடிகளை மொத்தமாக அகற்றப்பட்டதாக நம்பிக்கை தெரிவித்த காரணத்தாலேயே எண்ணெய் கப்பல்கள் இவ்வழித்தடத்தில் சென்று வருகிறது.
ஆனால் கடந்த ஒரு மாதத்தில் பல விபத்துக்கள் கடல் கண்ணி வெடிக்கள் மூலம் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் டிரம்ப் நிர்வாகம் பொய் சொன்னதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளையில் இவ்வழித்தடத்தில் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க சென்டரல் கமெண்ட் பாதுகாப்பு அளித்து வரும் வேளையிலும் இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை IRGC வெளியிட்டுள்ள அறிவிப்பில் 3 எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
