தமிழ்நாடு அரசு ஓசூரில் பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்ததிலிருந்து இதைச் சுற்றி பல கேள்விகளும், கணிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது. அப்படி இதில் முக்கியமான கேள்வி ஓசூர் விமான நிலையம் எங்கு அமைக்கப்படும் என்பது தான்.
மக்கள் மத்தியில் தற்போது பெரும்பாலானோர் கூறுவது ஓசூர் ஏரோட்ரோம், இன்னும் சில பேர் சூளகிரி அருகில் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். ஓசூர் கட்டமைப்புக்கும், வர்த்தகத்திற்கும், செலவுகளைக் குறைக்கும் இலக்குடன் பார்க்கும் போது ஓசூர் ஏரோட்ரோம் தான் சரியான தேர்வாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது.

இந்த ஓசூர் ஏரோட்ரோம் எங்கு உள்ளது..? இது தற்போது பயன்படுத்தப்படுகிறதா..? ஓசூர் ஏரோட்ரோம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது..? வாங்க ஓசூர் ஏரோட்ரோம்-ஐ ஒரு அலசு அலசுவோம்.
ஓசூர் ஏரோட்ரோம் என்பது ஓசூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெலகொண்டாபள்ளி (Belagondapalli) என்ற அமைந்துள்ளது. இது தனியார் விமான தளமாகும், இங்கு 7012 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட விமான ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளம் ஏர்பஸ் A320 மற்றும் போயிங் 737 விமானங்களைத் தரையிறக்கும் போதுமானது.
தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (Taneja Aerospace and Aviation Limited - TAAL) நிறுவனம் 1994ஆம் ஆண்டில் தனியார் துறையில் முதல் நிறுவனமாக பொது விமான போக்குவரத்துக்கான விமானங்களை உற்பத்தி செய்ய ஓசூரில் ஒரு ஏரோட்ரோம் நிறுவ மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்றது.
தற்போது தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனம் விமான தயாரிப்பு, விற்பனை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த விமான தளத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்த விமான தளம் தனியார் பயன்பாட்டுக்கான பிரிவின் கீழ் Directorate General of Civil Aviation (DGCA) அமைப்பு உரிமம் வழங்கியது.
ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் மற்றும் விஸ்தாரா போன்ற பல இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களைப் பராமரிப்பு பணிகளுக்கு தனேஜா ஏரோஸ்பேஸ்-ன் ஓசூர் ஏரோட்ரோம்-க்கு விமானங்களை அனுப்பும். சமீபத்தில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது முதல் Airbus A320neo விமானத்திற்கு பெயின்டிங் செய்வதற்காக இங்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ஓசூர் ஏரோட்ரோம்-ல் இருந்து விமான போக்குவரத்து சேவையை துவங்க முயற்சி செய்து தோல்வி அடைந்தது, இதற்கு தமிழ்நாடு அரசும் பல வகையில் உதவியது. இதற்குக் காரணம் மத்திய அரசுக்கும் பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் (Bangalore International Airport Limited - BIAL) இடையே செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவுக்குள் எந்த புதிய உள்நாட்டு விமான நிலையங்களையும் திறக்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் விமான நிலையங்களை வர்த்தக ரீதியாக இயக்கவோ கூடாது என்ற கண்டிஷன் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்த காலம் 25 ஆண்டுகள் ஆகும், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 2008 மே 24ஆம் தேதி தனது சேவைகளைத் தொடங்கியது. இந்த ஒப்பந்த காலம் 2033 இல் முடிவடைந்த பிறகு, பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையமும், புதிய ஓசூர் விமான நிலையமும் இயங்கத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் இரண்டு விமான நிலையமும் திறக்க முடியாது.
பெங்களூர் மையப்பகுதியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், இந்த விமான நிலையத்திற்கு செல்ல குறைந்தப்பட்சம் (அதிர்ஷ்டம் இருந்தால்) 2 மணி நேரங்கள் வரை ஆகும்.
அதே நேரத்தில், ஓசூர் TAAL விமான தளத்திற்கு எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து வெறும் 30-45 நிமிடங்களில் செல்ல முடியும். குறிப்பாக, எலக்ட்ரானிக் சிட்டி, ஓசூர் TAAL விமான தளத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications