தமிழ்நாட்டின் மேற்கு பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் கடந்த 5 வருடத்தில் மாபெரும் வளர்ச்சி அடைந்தாலும், இப்பகுதியின் ஓசூர் பகுதி 20 வருடங்களுக்கு அதிகமாக MSME நிறுவனங்களின் களஞ்சியமாக உள்ளது. இந்த நிலையில் ஓசூர் பகுதியின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் திட்டத்துடனும், ஓசூரை ஐடி சேவை தளமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக விமான நிலையம் அமைக்கும் திட்டம் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதற்கு ஏற்ப மாநில அரசு, மத்திய அரசிடமும், மத்திய அமைப்புகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்க 5 இடங்களைத் தமிழ்நாடு அரசு பட்டியலிட்ட நிலையில் இதில் 2 இடங்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது.

அடுத்தகட்டமாக இவ்விரு இடங்களுக்கான இரண்டாம் கட்ட இட ஆய்வுகளைத் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளன. ஓசூர் விமான நிலையம், பெங்களூர் விமான நிலையத்திற்கு இணையான போக்குவரத்து தேவையை உருவாக்கும் எனக் கணிக்கப்படும் காரணத்தால், இதை பூர்த்தி செய்வதற்காக இரண்டு ஓடுபாதைகள் கொண்ட 2000 ஏக்கர் விமான நிலையமாக இது அமையவுள்ளது.
ஓசூரில் அமைக்கப்பட உள்ள விமான நிலையம், பெங்களூரு நகரத்தின் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும் காரணத்தால் இரு பெங்களூர், கிருஷ்ணகிரி பகுதியில் இருக்கும் மக்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து வசதியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசூர் விமான நிலையம் அமைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் இடம் தனியார் நிறுவனமான தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) இயங்கி வரும் தனியார் விமான நிலையத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டாவது இடம் ஹோசூரிலிருந்து சுமார் 15.5 கிலோமீட்டர் தொலைவில் சூளகிரி-க்கு அருகே உள்ள உலகம் என்ற பகுதியும் ஆகும்.
ஓசூர் விமான நிலைய திட்டம் குறித்து தமிழக அரசு பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL) நிறுவனத்துடனும் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் ஓசூர் விமான நிலையம் அமைக்கப்படுவதில் BIAL நிறுவனத்தின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
மத்திய அரசுக்கும், பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL) நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் படி 2033 ஆம் ஆண்டு வரை 150 கிலோமீட்டர் சுற்றளவில் வேறு எந்த சர்வதேச விமான நிலையத்தையும் அமைக்கக் கூடாது என்ற கண்டிஷன் உள்ளது. இந்த ஓசூர் விமான நிலைய திட்டம் அந்த ஒப்பந்தத்தைத் தாண்டி எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதைத் தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் அடுத்த மெகா உள்கட்டமைப்பு திட்டமாக ஓசூர் விமான நிலையத்தில் சரக்கு கிராமத்தையும் (Cargo Village) நிறுவச் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் TIDCO, ஏஏஐ அமைப்பு விமான நிலைமை அமைப்பதற்கான இடத்தை 2ஆம் கட்ட ஆய்வு செய்து வருகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள் உடன் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், மாநிலத்தில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications