ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் கட்டமைப்பதில் தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக இருக்கிறது. ஓசூர் தொழில் நகரமாகவும் பெங்களூருக்கு அருகிலேயே இருப்பதாலும் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது.
ஓசூர் விமான நிலையம்: ஓலா, டாடா ,டிவிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி மையங்கள் ஓசூர் நகரத்தில் தான் அமைந்திருக்கின்றன. 500 பெரிய நிறுவனங்களின் ஆலைகள், 3,000 சிறு குழு தொழில் நிறுவனங்கள் இங்கே ஆலைகளை நிறுவி உற்பத்தி மேற்கொண்டுள்ளன. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு ஓசூரின் வளர்ச்சிக்கு விமான நிலையம் முக்கியம் என கருதுகிறது.
ஆய்வு பணிகள்: ஓசூர் விமான நிலையத்தை கட்டமைப்பதற்கு இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. பெலகொண்டபள்ளி , சூளகிரி , பாகலூர் ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. இங்கே விமான நிலையம் அமைப்பதற்கான சாதக பாதகங்கள் குறித்து Obstacle Limitation Surfaces - OLS எனப்படும் இடையூறு வரம்பு மேற்பரப்பு ஆய்வு தொடங்கப்பட்டது.

பேரிகை-பாகலூர்: விமான நிலையத்தின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு இந்த ஆய்வு என்பது அவசியம். அதாவது விமான நிலையம் அமைக்க இருக்கும் பகுதி, அதன் வான்பரப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதற்கான அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு பேரிகை - பாகலூர் பகுதியில் விமான நிலையம் கட்டுவதற்கான இடமாக முடிவு செய்திருப்பதாக டெக்கன் ஹெரால்டு செய்தி வெளியாகியிருக்கிறது.
ஏன் இந்த இடம்?: பேரிகை - பாகலூருக்கு இடைப்பட்ட பகுதியில் விமானநிலையம் அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது . இதில் பேரிகை ஓசூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், பாகலூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த இடமானது கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் அத்திப்பள்ளியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது . பெங்களூரு சேட்டிலைட் ரிங் சாலைக்கு அருகிலேயே இந்த பகுதி இருப்பதும் அரசு இதனை பொருத்தமான இடமாக கருத காரணமாக இருக்கிறதாம். கர்நாடகா எல்லையில் இருந்து 2 கிலோமீட்டர், மாலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதாக அனைத்து இடங்களையும் இணைக்கும் வகையில் இந்த இடம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
தொழில் வளர்ச்சிக்கு உதவும்: ஏற்கனவே தொழில் ரீதியான வளர்ச்சி பெற்று வரக்கூடிய ஓசூரில் விமான நிலையம் அமைத்தால் அங்கே மேலும் முதலீடுகளை ஈர்க்க முடியும். இருந்தாலும் விமான நிலையம் அமைப்பது என்பது அத்தனை சாத்தியமான ஒரு வேலையாக இருக்காது. அரசு இடத்தை முடிவு செய்து மத்திய அரசு, விமான நிலைய ஆணையம் ஆகியவற்றின் அனுமதியை பெற்றாலும் கூட பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டி இருக்கும்.
என்ன சவால்: ஏனெனில் பெங்களூரு விமான நிலையம் கட்டப்படும் போது 2033 ஆம் ஆண்டு வரை இந்த விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக எந்த ஒரு விமான நிலையமும் கட்டமைக்க கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பார்க்கும்போது ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications