ஓசூர்: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விமான நிலையங்களை அமைத்து விமான போக்குவரத்தினை ஏற்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.
ஓசூர் விமானநிலையம்: தொழில் ரீதியாகவும் , உற்பத்தி ரீதியாகவும் ஓசூர் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஓலா, டாடா, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உற்பத்தி மையங்கள் இங்கே செயல்படுகின்றன. வாகன் உற்பத்தி, எலக்ட்ரிக்ல் பொருட்கள் உற்பத்தி இங்கே அதிகரித்து வருகிறது. பெங்களூருவுக்கு அருகிலேயே இருப்பதால் புதிதாக முதலீடுகளும் குவிகின்றன. இந்த சூழலில் ஓசூரில் விமான நிலையம் அமைப்பது ஏற்றுமதி இறக்குமதி துறைக்கு ஊக்கம் தரும் வகையில் அமையும்.

விரிவான ஆய்வறிக்கை: ஓசூரில் வளர்ச்சிக்கு ஏற்ப அங்கே விமான நிலையத்தை கட்டமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது, இந்த நிலையில் ஓசூர் விமான நிலையத்திற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி இன்னும் மூன்று மாதத்திற்குள் நடந்து விடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தி ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி மாநில அரசு ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வு அறிக்கை நடத்துவதற்கு ஒரு கன்சல்டிங் அமைப்பை நிர்ணயம் செய்திருந்தது .
3 மாதங்களில் நிலம் கையகப்படுத்தல்: ஓசூரில் அரசு கூறிய இரண்டு இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையின் மீது தமிழ்நாடு அரசு தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த ஒன்றரை மாத காலத்திற்குள் அரசு இந்த இரண்டு இடங்களில் எங்கே விமான நிலையம் அமைகிறது என்ற முடிவினை எடுத்து விடும். இதனை அடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்கிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த இரண்டு இடங்கள் என்னென்ன?: தற்போது ஓசூரில் தனியார் நிறுவனமான தனேஜா ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இடத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு இடம் கண்டறியப்பட்டிருக்கிறது, மற்றொன்று சூளகிரி பகுதியில் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் தமிழ்நாடு அரசு தனஜா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் ஓசூர் விமான நிலையத்தை கட்டமைப்பதில் கூட்டாக இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தது. இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் அது தொடர்பான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்திய அரசுக்கு கடிதம்: இந்த இரண்டு இடங்களிலும் விமான நிலையத்தை கட்டமைப்பதற்கான சாதக பாதகங்கள் என்னென்ன என்பது இந்த அறிக்கையில் விரிவாக இடம் பெற்று இருப்பதாகவும் அரசு விரைவில் எந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பது என்பதையும் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடைய பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைந்திருப்பதால் ஓசூர் வான்வெளி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
அரசு முன்னெடுப்பு: தமிழ்நாடு அரசு இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்க இருப்பதால் அதற்கென தனியாக கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கான அனுமதி தரும்படி பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த அனுமதி இரண்டு மாதங்களுக்குள் கிடைத்துவிடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஓசூர் விமானநிலையத்தை கட்டமைக்க பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் எதிர்ப்பு தெரிவிப்பதால் அது தொடர்பான பேச்சுவார்த்தையையும் அரசு தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications