ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது . ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான பணிகளையும் தமிழ்நாடு அரசு தீவிர படுத்திருக்கிறது .
பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதற்கு பக்கத்திலேயே ஓசூர் நகரம் இருக்கிறது .எனவே ஓசூர் வான்வெளி என்பது பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந்த இடத்தில் விமான நிலையத்தை அமைப்பது சாத்தியமா என்பது குறித்து முதல் சந்தேகம் எழுப்பப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு ஓசூரில் இரண்டு இடங்களை தேர்வு செய்து அங்கே பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு இணங்க விமான நிலையத்தை அமைத்து செயல்படுத்த முடியுமா என்பது தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டது .

Obstacle limitation surface என்ற பெயரில் நடந்த ஆய்வில் ஓசூரில் இரண்டு இடங்களில் விமான நிலையத்தை அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என டெக்கன் ஹெரால்டு செய்தி கூறுகிறது. ஏற்கனவே பெலகொண்டபள்ளியில் டிஏஏஎல் என்ற தனியார் நிறுவனத்தின் விமான நிலையம் அமைந்திருக்கிறது, இந்த விமான நிலையத்தை கையகப்படுத்தி ஓசூர் விமான நிலையமாக மேம்படுத்துவது அல்லது சூளகிரி பகுதியில் விமான நிலையம் அமைப்பது என திட்டமிடப்பட்டது.
இந்த இரண்டு இடங்களிலும் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் விமான நிலையம் அமைக்க இரண்டுமே பொருத்தமான இடம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இங்கு விமான நிலையத்தை அமைப்பதற்கான சாதக பாதகங்கள் என்னென்ன என்பது குறித்த இந்த அறிக்கை தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட இருக்கிறதாம். இதனை அடுத்து அதிகாரிகள் தரப்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையம் எங்கே அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக டெக்கன் ஹெரால்டு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு இடங்களுமே பெங்களூரு சேட்டிலைட் டவுன் ரிங் ரோடுக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன . அரசு இடத்தை தேர்வு செய்த உடனே கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன . இந்த இரண்டு இடங்களுமே கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடங்கள் என ஏற்கனவே இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி தந்திருக்கிறது.
பல்வேறு தொழில் நிறுவனங்களும் பெல்கொண்டபள்ளியில் விமான நிலையம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு இந்த விமான நிலையம் கட்டுவதற்கு பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திடம் இருந்து நோ அப்ஜக்சன் சான்றிதழ் வழங்க வேண்டும். ஏனெனில் பெங்களூரு விமான நிலையம் கட்டப்படும் போது 2033 ஆம் ஆண்டு வரை இந்த விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக எந்த ஒரு விமான நிலையமும் கட்டமைக்க கூடாது என விமான நிலைய நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பார்க்கும்போது ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனம் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications