தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலையத்திற்காக வான் பாதுகாப்பு அனுமதி பெற பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேற்கு தமிழ்நாட்டை அடுத்த சென்னையாகவும், பெங்களூர்-க்கு இணையாகவும் உருவாக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு காலம் காலாமாக செயல்படுத்தி வந்தாலும், முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு படுதீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
ஓசூர் - கிருஷ்ணகிரி பகுதி வெறும் MSME நிறுவனங்களின் களஞ்சியம் என்பதை தாண்டி பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி தளமாகவும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் வாகனம் போன்ற புதிய தொழில்நுட்ப துறையில் முதலீட்டையும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தளமாக மாறியுள்ளது.

இதேவேளையில் ஓசூர்-ஐ பெங்களூர்-க்கு இணையாக ஒரு ஐடி ஹப் ஆக மாற்றும் முயற்சியை சமீபத்தில் தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா அவர்கள் தலைமையில் வேகமெடுத்துள்ளது. இதன் மூலம் ஓசூர் - கிருஷ்ணகிரி பகுதி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிக்கு மையப்புள்ளியாக மாறி வரும் வேளையில் இதன் எதிர்கால வளர்ச்சிக்கு சரியான அடித்தளம் அமைக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசு ஓசூரில் பிரம்மாண்ட விமான நிலைமையம் அமைக்கும் திட்டத்தை வேகமாக செயல்படுத்தி வருகிறது.
ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை கிட்டத்தட்ட உறதி செய்யப்பட்ட நிலையில் தற்போது, தமிழ்நாடு அரசு அப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக இடையூறு வரம்பு மேற்பரப்பு (Obstacle Limitation Surfaces - OLS) ஆய்வு தொடங்கப்பட்டு வான் பாதுகாப்பு அனுமதி பெற மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த பணிகள் ஜூலை 2025 இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வு, விமான நிலையத்தின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு அவசியமானது மற்றும் 20 கிமீ சுற்றளவில் உள்ள இடையூறுகளை அளவிடப்படும். மத்திய அரசு, மாநில் அரசு, AAI என பல அமைப்புகள் செய்த பல கட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பின்பு இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள இடம், ஒன்று தனியார் விமான நிறுவனமான TAAL அருகே பெலகொண்டபள்ளியில், மற்றொன்று உலகம் என்ற பகுதி, இது ஓசூர் கிழக்கு மற்றும் சூலகிரி வடக்கில் உள்ளது. தற்போது துவங்கப்பட்டு உள்ள ஆய்வ பணிகள் முடிந்கு பாதுகாப்பு அமைச்சக ஒப்புதல் 3-4 மாதங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுக்கு பின்பு தமிழ்நாடு அரசு இடத்தை இறுதி செய்த பின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படும்.
ஓசூர் விமான நிலைய அறிவிப்பு: 2024 ஜூன் 27 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதாக அறிவித்தார். இந்த பிரம்மாண்ட விமான நிலையும் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
2024 அக்டோபரில், விமான நிலைய ஆணையம் (AAI) ஐந்து இடங்களை ஆய்வு செய்து, இரண்டை பட்டியலிட்டது. 2025 ஏப்ரலில், AAI இறுதி சாத்தியக்கூறு அறிக்கையை அரசுக்கு அளித்தது. மே 2025-ல், OLS ஆய்விற்கு ஆலோசகர் நியமிக்கப்பட்டார், இது தற்போது நடைபெறுகிறது.
ஓசூர் விமான நிலையம் ஒரு வரபிரசாதம்: ஓசூர், ஒரு முக்கிய ஆட்டோமொபைல் மற்றும் தொழில்துறை மையமாக உள்ளது. இங்கு TVS மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், டாடா எலக்ட்ரானிக்ஸ், டெல்டா மற்றும் ஓலா எலக்ட்ரிக் போன்ற பெரு நிறுவனங்கள் உள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உலகளாவிய விநியோக சங்கிலிகளுக்கு பங்களிக்கின்றன. சமீபத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் முதலீடு செய்து தொழிற்சாலையை துவங்கியுள்ளது.
இந்த நிலையில் ஓசூரில் விமான நிலையம் அமைப்பது புதிய முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் ஓசூரை ஒரு IT மையமாக மாற்றும் 'Knowledge Corridor' திட்டத்திற்கும் முக்கியமானதாக இருக்கும். இதன் மூலம் பெங்களூருவுடன் இரட்டை-நகர பொருளாதார மண்டலமாக உருவாக்க முடியும். மேலும் ஓசூர் வளர்ச்சி மூலம் நாட்டின் விநியோக சங்கிலியை மேம்படுத்தி மற்றும் போக்குவரத்து செலவுகளை குறைக்கும். ஓசூரின் வாழ்க்கைச் செலவு அதாவது லிவ்விங் காஸ்ட் பெங்களூருவை விட குறைவு என்பதால் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும்.
விமான நிலையத்திற்கு இருக்கும் பிரச்சனை: ஓசூர் விமான நிலையம், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (BIAL) உடனான மத்திய அரசின் ஒப்பந்தத்தால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் 2033 வரை 150 கிமீ சுற்றளவில் புதிய விமான நிலையங்களை அமைக்க தடை செய்கிறது.
இதற்கு BIAL-லிருந்து அனுமதி (NOC) தேவை. மேலும், பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) காரணமாக வான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, இதற்கு விரிவான ஆய்வும் தேவை. இருந்தாலும், தமிழ்நாடு அரசு இதை முன்னெடுத்து, பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேபோல் தமிழ்நாடு அறசு சமீபத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் Fairfax India தலைவரும் இந்தியருமான ப்ரேம் வட்சா-ஐ அழைச்சு முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications