ஓசூர்: தொழில் உற்பத்தி பிரிவில் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நகரமாக ஓசூர் திகழ்கிறது. கிருஷ்ணகிரி வட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய ஓசூர் நகரை பொருத்தவரை ஏற்கனவே இருசக்கர வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி என பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை கொண்டிருக்கிறது.
பெங்களூருக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் ஓசூர் நகரின் வளர்ச்சி வேகமானதாக இருக்கிறது. அதற்கேற்ற வகையில் தமிழ்நாடு அரசும் ஓசூருக்கு என பிரத்தியேகமாக விமான நிலையத்தை கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு பல்வேறு இடங்களை தேர்வு செய்து அங்கே விரிவான திட்ட ஆய்வறிக்கையை தயாரித்தது.

இந்த சூழலில் பேரிகை பாகலூர் பகுதியில் ஓசூர் விமான நிலையத்தை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பெங்களூருவின் அத்திபள்ளி எல்லையில் இருந்து 26.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த பாகலூர் பேரிகை பகுதி. தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்திருப்பதால் ஓசூர் தொழில்துறைக்கு ஏற்றுமதி இறக்குமதிக்கு பொருத்தமான ஒரு விமான நிலையம் ஆகவும் தெற்கு மற்றும் கிழக்கு பெங்களூரு பகுதிகளுக்கு அருகிலேயே செயல்படக்கூடிய ஒரு விமான நிலையமாகவும் இது இருக்கும் என தமிழ்நாடு அரசு கருதுகிறதாம்.

இந்த விமான நிலையம் ஓசூர் மக்களுக்கு மட்டும் இல்லாமல் பெங்களூருவை சேர்ந்தவர்களும் எளிமையாக அணுகும் வகையில் இருப்பது விமான நிலைய வளர்ச்சிக்கு உதவும் என அரசு நினைக்கிறது. பேரிகை பாகலூர் என்பது ஓசூரில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. மற்ற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடும்போது பேரிகை பாகலூர் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என தரப்பட்ட அறிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த இடத்தை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பேரிகை - பாகலூர் பகுதிக்கு அருகிலேயே பெங்களூரு சேட்டிலைட் டவுன் சாலை அமைந்திருக்கிறது. பெங்களூருவின் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி ,சர்ஜாபூர், ஒயிட் ஃபீல்டு பகுதிகளுக்கு எல்லாம் இங்கிருந்து சாலை ரீதியிலான இணைப்பு வலுவானதாக இருக்கிறது. எனவே இந்த இடத்தை தேர்வு செய்வது என்பது அந்த விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என அரசு கருதுகிறது .
இந்த இடத்தில் விமான நிலையம் கட்டமைக்கப்பட்டால் ஓசூர் மக்கள் மட்டும் இன்றி பெங்களூரு மக்களும் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு விமான நிலையமாக இது மாறும். ஏனெனில் தெற்கு பெங்களூர் பகுதியில் இருப்பவர்களுக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதை விட ஓசூர் விமான நிலையத்திற்கு வந்து செல்வது மிகவும் ஈஸியானதாக இருக்கும் குறைந்த பயண நேரமே தேவைப்படும்.
தெற்கு பெங்களூரில் இயங்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு தங்களுடைய சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்கும் இந்த விமான நிலையம் பொருத்தமானதாக மாறும். ஓசூர் தொழில்துறையும் பெங்களூருவின் ஐடி துறையும் சந்திக்கக்கூடிய ஒரு பகுதியாக இந்த விமான நிலையம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கருதுகிறது.
விமான நிலையம் அமையும் இடம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும். இதனை அடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். முன்னதாக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஓசூர் வருகை தந்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஓசூர் விமான நிலைய திட்டத்தில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறியிருந்தார் . உலக தரத்திலான ஒரு சர்வதேச விமான நிலையம் நிச்சயமாக அமையும் என்றும் இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்து விட்டால் ஓசூரில் அடையாளமே பெரிய அளவில் மாறிப் போகும் என்றும் கூறியிருந்தார்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் விமான நிலையம் அமைக்க 2300 ஏக்கர் பரப்பளவிலான நிலம் தேவைப்படும் என கூறியுள்ளது. இருந்தாலும் இந்த விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றாக வேண்டும். ஏனெனில் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தங்களுடைய விமான நிலையத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 2033 ஆம் ஆண்டு வரை எந்த ஒரு புதிய விமான நிலையமும் அமைக்க கூடாது என்ற நிபந்தனையை விதித்துள்ளது. இது தவிர பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் செயல்படுவதால் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியும் பெற வேண்டி இருக்கிறது. இடத்தை முடிவு செய்த உடன் தமிழக அரசு இதற்கான பணிகளை முன்னெடுக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications