கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உற்பத்தி நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது . மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என ஓசூர் உற்பத்தி நிறுவனங்களுக்கான அடையாளமாக மாறி வருகிறது. ஓசூர் நகரத்தில் பல்வேறு நிறுவனங்களும் மேற்கொண்டு முதலீடுகளை செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறது.
ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான இடத்தை முடிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன . பெங்களூருக்கு அருகிலேயே இருப்பதால் ஓசூர் நகரம் உற்பத்தி மட்டுமில்லாமல் பல்வேறு துறை சார்ந்தும் வேகமான வளர்ச்சி பெறுகிறது. ஓசூரில் பேரிகை மற்றும் பாகலூருக்கு இடைப்பட்ட பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு முடிவு செய்து இருக்கிறது என சொல்லப்படுகிறது.

இந்த இடம் என்பது அத்திப்பள்ளியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலைய இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அடுத்த கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். இதனை அடுத்து கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் விடப்படும். இந்த விமான நிலைய பணிகள் தொடங்கினால் ஓசூர் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர் .
பேரிகை மற்றும் பாகலூர் இடைப்பட்ட பகுதியில் விமான நிலையம் அமைகிறது என்பதால் தெற்கு பெங்களூர் மற்றும் ஓசூர் நகரம் முழுவதுமே ரியல் எஸ்டேட் கொடிகட்டி பறக்கும் என சொல்லப்படுகிறது . குறிப்பாக குடியிருப்புகள் மட்டும் இல்லாமல் லாஜிஸ்டிக் சம்பந்தப்பட்ட கட்டுமானங்களுக்கான தேவை அதிகரிக்கும் . இது இந்த பகுதிகளில் நிலங்களின் மதிப்பை பல மடங்கு உயர்த்தும் என நிச்சயமாக கூறலாம்.

தற்போதைக்கு பாகலூர் பேரிகை பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அனரோக் நிறுவனம் நடத்திய ஆய்வில் பேரிகை பாகலூர் மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில் ஒரு சதுர அடி 1500 லிருந்து 3500 வரை விற்கப்படுவதாகவும் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இங்கு 40 சதவீதம் வரை நிலங்களின் மதிப்பு உயரும் என்றும் கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்த குறிப்பிட்ட பகுதி பெங்களூர் உடனான இணைப்பையும் எளிமைப்படுத்துகிறது என்பதால் ஓசூர் விமான நிலையம் என்பது தமிழ்நாடு மக்களால் மட்டுமல்ல அதிக எண்ணிக்கையில் பெங்களூரு மக்களாலும் பயன்படுத்தும் விமான நிலையமாக மாறும் என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் மிக முக்கியமான ஒரு லாஜிஸ்டிக் மையமாக ஓசூர் உருவாகும்.
தற்போதே ஓசூர் விமான நிலையம் அமைக்க இருப்பதாக சொல்லப்படும் பகுதியில் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் வேகமெடுத்து விட்டதாக பல்வேறு தரகு நிறுவனங்களும் கூறுகின்றன. குறிப்பாக சர்ஜாபூர் ,பாகலூர், ஓசூர் மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில் நிலங்களை வாங்க பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தனி நபர்களும் போட்டி போடுவது தெரிய வந்திருக்கிறது.
இந்த இடத்தில் தான் விமான நிலையம் அமைய உள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான அன்றைய தினமே நிலங்களின் மதிப்பு உயர தொடங்கிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குடியிருப்புகள், புதிய இண்டஸ்ட்ரியல் கிளஸ்டர்கள் உருவாவதற்கு ஏற்ற சூழல்களை ஓசூர் கொண்டிருக்கிறது. விமான நிலையம், வர்த்தக மையம், அறிவுசார் வழித்தடம் என அடுத்தடுத்த மேம்பாடுகள் ஓசூரின் அடையாளத்தையே மாற்ற போகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications