தமிழ்நாட்டின் முக்கிய தொழில்நகரமான ஓசூரில் திட்டமிடப்பட்டு உள்ள சர்வதேச விமான நிலையம், பெங்களூருவின் ஐடி தொழில்நுட்ப பகுதிக்கும், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மற்றும் தமிழ்நாடு எல்லைப்புற பகுதிகளுக்கு பெரும் பலன்களை அளிக்கும் என பல வல்லுனர்களால் கணிக்கப்பட்டு வருகிறது.
ஒசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 3 கோடி விமான பயணிகளைக் கையாளும் வகையில் பிரம்மாண்ட பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தற்போது, பெங்களூரு கெம்பவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் இருந்து செல்வதற்கு 60 கிமீ பயணிக்க வேண்டும், இதுவும் பெங்களூர் டிராபிக்கில் பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.
சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வோர் போக்குவரத்து நெரிசல் மற்றும் போதுமான பொது போக்குவரத்து வசதி இல்லாததால், பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஓசூரில் விமான நிலையம் அமைப்பதன் மூலம், பெங்களுர் தென் கிழக்கு பகுதியின் வளர்ச்சி மேம்படும் என தொழில்துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஓசூர் விமான நிலைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மோகன்தாஸ் பாய்: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பாய் கூறுகையில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களுக்கும் பலன் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனாலும் கர்நாடக அரசு, பொம்மனஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்துறை பகுதிகளின் வளர்ச்சியிலும், பொம்மனஹள்ளி மற்றும் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் இடையே பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொம்மனஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்துறை பகுதிகளை மேம்படுத்துவதன் மூலம் ஐடி மற்றும் இன்ஜினியரிங் துறைக்கு பெரும் கிடைப்பது மட்டும் அல்லாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பிற துறைகளிலும் திறன்மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என மோகன்தாஸ் பாய் கூறினார்.
சேம்பர் ஆஃப் காமர்ஸ்: இதேபோல் கர்நாடக சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீ மற்றும் ஓசூர் வணிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான முரளிதர் கூறுகையில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பது மிகவும் சிறப்பான முடிவாகும், குறிப்பாக ஓசூரில் உள்ள வாகனத் தொழில் மற்றும் எலக்ட்ரிக் வாகன தொழில் துறைகளைச் சேர்ந்த வணிகர்களுக்கு இதன் மூலம் பெரிய அளவில் பயன் அடைய முடியும்.
பெங்களூர் நகரின் தெற்கு பகுதி, ஓசூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மக்களுக்கு சர்வதேச விமான நிலையத்திற்கு பயணம் செய்யும் நேரம் குறைவதால், உற்பத்தித்திறன் அதிகரிப்பதோடு, மொத்த எகோசிஸ்டம் மேம்படும் என தெரிவித்துள்ளார்.
FKCCI அமைப்பு: இதேபோல் FKCCI அமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திர லஹோதி கூறுகையில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பது பெங்களூர் நகரின் வளர்ச்சிக்கு மிகவும் பாசிட்டிவ் ஆன வளர்ச்சியைத் தரும் எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், வியாபாரிகள் இனி ஓசூரில் இருந்து விமானம் மூலம் பயணம் செய்வதனால், டெவனஹள்ளிக்கு செல்வதற்கு எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications