தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள் உடன் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், மாநிலத்தில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அடுத்த மெகா உள்கட்டமைப்பு திட்டமான ஓசூர், சென்னை பரந்தூர் விமான நிலையத்தில் புதிதாக ஒரு சேவையைக் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களான ஓசூர் மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் ஸ்டைலின் தலைமையிலான அரசு புதிய விமான நிலையங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறந்து. ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேடி வரும் வேளையிலும், சென்னை பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க பலதரப்பட்ட அனுமதிகள் பெற்று தயாராக இருக்கும் வேளையில் இந்த இரு விமான நிலையத்திலும் TIDCO முக்கியமான திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

TIDCO அமைப்பின் தலைமையில் தான் இந்த இரு விமான நிலையங்களையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓசூர் மற்றும் சென்னை தொழிற்துறை பகுதியில் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இரண்டிலும் சரக்கு கிராமங்களை (Cargo Village) நிறுவ திட்டமிடப்பட்டு வருகிறது.
சரக்கு கிராமம் என்பது தேசிய மற்றும் சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கான பொருட்களின் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகத்திற்காக நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படும் ஒரு சிறப்பு பகுதியாகும். சரக்கு கிராமத்தில் கிடங்கு, பிரேக்-பல்க் சென்டர்கள், சேமிப்பு பகுதிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற வசதிகள் ஆகியவை மொத்தமாகச் சரக்கு போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் இங்கு இருக்கும்.
TIDCO இன் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் நந்தூரி, பாரந்தூர் விமான நிலையத்திற்கான இந்த புதிய திட்டத்தைச் சமீபத்தில் அறிவித்தார். இது ஒரு மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. இந்த சரக்கு கிராமத்தில் சரக்கு போக்குவதிற்குத் தேவையான மொத்த உள்கட்டமைப்பும் இருக்கும்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய சரக்கு உள்கட்டமைப்பின் உள்ள பிரச்சனைகளையும், விரிவாக்கம் செய்ய முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு புதிதாகக் கட்டப்படும் இரு விமான நிலையத்திலும் இந்த சரக்கு கிராம கட்டமைப்பை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் முக்கியமாக பரந்தூர் சரக்கு கிராமம் கட்டமைப்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரும் பன்முக லாஜிஸ்டிக்ஸ் பூங்கா (MMLP) உடன் இணைக்கப்படும் என்று சந்தீப் நந்தூரி தெரிவித்தார். இதன் மூலம் அதிகளவிலான சரக்குகளை விமான போக்குவரத்தில் கையாளமுடியும் என்பது முக்கியமான விஷயம். இந்த கட்டமைப்பு ஏற்றுமதிக்கு மட்டும் அல்லாமல் இறக்குமதிக்கும் அதிகளவில் பயன்படும்.
அதேபோல், ஓசூர் விமான நிலையமும், உற்பத்தி, எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் செமிகண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொள்ளும் இடமாக இருக்கும் காரணத்தால் இங்கும் சரக்கு கிராமம் அமைக்கப்படுவது மூலம் வேகமாகச் சரக்குகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிற்கும் அனுப்ப முடியும்.
TIDCO தற்போது இரண்டு விமான நிலையங்களுக்கும் மாஸ்டர் பிளான் உருவாக்கியுள்ளது, இவ்விரு சந்தைகளின் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வலுவான சரக்கு உள்கட்டமைப்பை உருவாக கவனம் செலுத்தி வருகிறது. ஒருபக்கம் விமான பயணிகள் சேவைகள் மேம்படுத்தப்பட்டாலும் சரக்கு போக்குவர்த்து என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இதேவேளையில், தமிழ்நாடு அரசு இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து உயர் திறன் கொண்ட ரயில் மற்றும் சரக்கு வழித்தடங்களை உருவாக்கும் வழித்தடங்களை ஆராய்ந்து வருகிறது. மதுரை - சென்னை - ஓசூர், கோயம்புத்தூர் - தூத்துக்குடி உள்ளிட்ட பல வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதேவேளையில் தமிழ்நாட்டில் உள்ள துறைமுகத்தில் பெரும்பாலான துறைமுகத்தில் சரக்கு கையாளும் அளவும், முறையும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பொருட்களைத் தயாரிக்க வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் துவங்கி தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வெளிநாடுகளும், நாட்டின் பிற நகரங்களுக்கும் வேகமாக சப்ளை செய்யப்படுவது மூலம் அதிகப்படியான உற்பத்தித் திறனை எட்ட முடியும். இதனை அடையவே தமிழ்நாடு அரசு விமானம், ரயில், கப்பல் என 3 வழிகளிலும் சரக்கு போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் மேம்பட்ட சேவைகளை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications