தென்னிந்தியா மாநிலங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு திட்டம் என்றால் ஓசூர் - பெங்களூர் மத்தியிலான இன்டர்ஸ்டேட் மெட்ரோ திட்டம் தான். ஓசூர் உற்பத்தி துறையிலும், பெங்களூர் ஐடி சேவை துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இரு நகரங்கள் மத்தியிலான போக்குவரத்தை தொடர்ந்து மேம்படுத்துவது முக்கியமானதாக விளங்குகிறது.
ஓசூரில் இருந்து பெங்களூர் நகரின் பொம்மசந்திரா பகுதி வரையிலான இன்டர்ஸ்டேட் மெட்ரோ திட்டத்தை கர்நாடக அரசு முன்வைத்த நிலையில், பல கேள்விகள் உடன் இத்திட்டம் நிற்கும் வேளையில் முக்கியமான பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பெங்களூரின் பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஓசூர் இடையே அதிகப்படியான மக்கள் பயணிக்கும் வகையில் மெட்ரோ திட்டத்தின் மூலம் போக்குவரத்துப் பாதையை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் குறித்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் (BARSYL) - Habog Consultants என்ற கூட்டணி ஏலம் மூலம் வென்றுள்ளதாக தீ மெட்ரோ ரயில் காய் தெரிவித்துள்ளது.
ஓசூர் - பெங்களூர் எல்லையில் NH-44 சாலையில் சுமார் 18 கிமீ நீளமுள்ள இருமாநிலங்களுக்கு இடையேயான திட்டம் தான் ஓசூர் - பெங்களூர் இன்டர்ஸ்டேட் மெட்ரோ திட்டம். இத்திட்டம் ஓசூரில் துவங்கி 6.5 கிமீ பயணித்து பெங்களூர் எல்லை பகுதியான அட்டிபெல்லே வழியாக 11.5 கிமீ பயணித்து கர்நாடக தலைநகரின் பெங்களூரின் பொம்மசந்திரா பகுதியில் அமைந்துள்ள அதன் மாநில மெட்ரோ திட்டத்துடன் இணைக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நியமித்துள்ள சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையின் ஆலோசகர் ஓசூர் - பெங்களூர் மத்தியிலான மெட்ரோ திட்டம் குறித்து ஆய்வு செய்து தேவையான சீரமைப்புகள், மெட்ரோ அமைப்பின் வகை (மெட்ரோ, மெட்ரோலைட், மெட்ரோ நியோ), தோராய பயணிகளின் எண்ணிக்கை, மெட்ரோ ரயில் நிலையங்கள் & டிப்போவின் இடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுமான செலவுகளை ஆய்வு செய்து பரிந்துரைக்கும்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இந்த ஒப்பந்தத்திற்கான ஏலங்களை ஆகஸ்ட் 2023 அறிவித்தது, சுமார் 180 நாள் நிறைவு காலக்கெடுவும் கொடுத்தது. இதில் 11 பேர் ஏல விண்ணப்பத்தை செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டு, பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் (BARSYL) - Habog Consultants என்ற கூட்டணி குறைந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் (BARSYL) - Habog Consultants இந்த ஒப்பந்தத்திற்கு 29.44 லட்சம் ரூபாயை ஏல விண்ணப்பத்தில் கொடுத்திருந்தது. இதை தொடர்ந்து Almondz Global Infra - Four Wall Consultancy JV 58.71 லட்சம் ரூபாய்க்கும், எல் அண்டி இன்பரா இன்ஜினியரிங் 62.68 லட்சம் ரூபாய்க்கும் விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 3 நிறுவனங்கள் தான் குறைவான மதிப்பீட்டில் விண்ணப்பித்த நிறுவனங்கள், அதிகப்படியான தொகையை RINA Consulting என்ற நிறுவனம் 2.07 கோடி ரூபாய் தொகையுடன் ஏல விண்ணப்பம் சமர்ப்பித்து இருந்தது.


Click it and Unblock the Notifications