ஸ்டாலின் எடுத்த அதே திட்டத்தை விஜய் கையில் எடுக்கிறார்.. ஓசூர்- பெங்களூர் இன்டர்ஸ்டேட் மெட்ரோ!

தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பில் மாநிலத்தின் முக்கிய வர்த்தக நகரமாக இருக்கும் ஓசூரில் இருந்து ஐடி நகரமான பெங்களுரை இணைக்கும் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவிலான நாட்டின் முதல் இண்டர்ஸ்டேட் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கையை தமிழ்நாடு எடுக்கும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள், திட்ட ஆய்வு, சாத்தியக்கூர்களை ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் தேக்க நிலையில் இருந்த, மீண்டும் செயல்படுத்தும் பணியில் இறங்க விஜய் தலைமையிலான அரசு தயாராகியிருப்பதாக பட்ஜெட்ட வாயிலாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசும் - கர்நாடக அரசும் நெருங்கி பணியாற்றும் எனவும் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது.

ஸ்டாலின் எடுத்த அதே திட்டத்தை விஜய் கையில் எடுக்கிறார்.. ஓசூர்- பெங்களூர் இன்டர்ஸ்டேட் மெட்ரோ!

இத்திட்டம் ஓசூரில் சிப்காட் பகுதியில் துவங்கி பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி அருகில் இருக்கும் பொம்மசந்திரா மெட்ரோ ஸ்டேஷன் உடன் இணைக்கும் சுமார் 23 கிலோமீட்டர் திட்டமாகும். இத்திட்டத்தில் 12 கிலோமீட்டர் கர்நாடகாவிலும், 11 கிலோமீட்டர் தமிழ்நாட்டிலும் அமைய உள்ளது. இந்த 23 கிலோமீட்டர் நீண்ட வழித்தடத்தில் சுமார் 12 ஸ்டேஷன்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது, இதில் முக்கிய நிறுத்தமாக ஓசூர் பஸ் ஸ்டான்ட் மற்றும் பெங்களூரின் எல்லை பகுதியான அத்திபள்ளி இருக்கிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்ரேஷன் அமைப்புகள் இணைந்து பல முறை ஆலோசனை செய்துள்ளது. இந்த ஆலோசனைகள் தற்போது கொள்கை முடிவு மற்றும் கட்டுமானத்தில் இருக்கும் சவால்களை ஆய்வு செய்யும் கட்டத்தில் உள்ளது.

இது வெறும் இன்டர்ஸ்டேட் மெட்ரோ ரயில் திட்டம் என மட்டும் குறுகிய வட்டத்தில் அடைக்காமல், நாட்டின் முக்கிய தொழிற்துறை நகரத்தையும், நாட்டின் முக்கிய ஐடி நகரத்தையும் இணைக்கும் மாபெரும் திட்டமாகும். இத்திட்டம் செயல்படுத்துவதில் பல சவால்கள் இருந்தாலும், இது இரு மாநிலத்தில் எல்லை நகரங்களில் இருக்கும் மக்களுக்கு ஜாக்பாட் ஆக மாறும் வாய்ப்பை பெற உள்ளது.

இந்த மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஓசூர் ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி பெரிய அளவில் மேம்படும், இதேபோல் தினமும் லட்சக்கணக்கான ஊழியர்களை வேகமாக பெங்களூருக்கு இயக்க முடியும், இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன் மூலம் இரு மாநிலத்திற்கும் பலன் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+