சென்னை: சென்னை மெட்ரோ ரயில் (CMRL) தமிழ்நாட்டுக்கும் கர்நாடகா மாநிலத்திற்கும் மத்தியிலான இன்டர்ஸ்டேட் மெட்ரோல் ரயில் திட்டத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஐடி நகரமான பெங்களூர் - ஓசூர் பகுதிகளை மெட்ரோ ரயில் வாயிலாக இணைக்கும் திட்டத்தின் விரிவான ஆய்வு அறிக்கையைத் தயாரித்து வருகிறது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வசிப்பிட அமைச்சகம் (MoHUA) இயக்குநர் மற்றும் தமிழ்நாடு அரசு (GoTN) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாக தெரிவிக்கிறது.

தமிழ்நாடு - கர்நாடகா எல்லை பகுதியில் இருக்கும் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு திட்டம் என்றால் அது ஓசூர் - பெங்களூர் மத்தியிலான இன்டர்ஸ்டேட் மெட்ரோ திட்டம் தான். ஓசூர் உற்பத்தித் துறையிலும், பெங்களூர் ஐடி சேவைத் துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இரு நகரங்கள் மத்தியிலான போக்குவரத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவது முக்கியமானதாக விளங்குகிறது.
பெங்களூர் நகரின் பொம்மசந்திரா-வில் இருந்து அட்டிபெல்லி வழியாக ஓசூரை இணைக்கும் திட்டம் தான் இந்த இன்டர்ஸ்டேட் மெட்ரோ திட்டம். இந்த முக்கியமான திட்டத்தைக் கர்நாடக அரசு முன்வைத்த நிலையில், பல கேள்விகள் உடன் இத்திட்டம் நிற்கும் வேளையில், முக்கியமான பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அனைத்து பெரிய திட்டங்களுக்கும் முதல் படி DFR எனப்படும் விரிவான திட்ட ஆய்வறிக்கையை உருவாக்குவது தான்.
இந்த அறிக்கையை உருவாக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஏ.சித்திக், IAS, இன்று (27-08-2024) பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (BMRCL) தலைமை நிர்வாக அதிகாரி எம்.மகேஸ்வர ராவ் அவர்களை BMRCL தலைமையகத்தில் சந்தித்து, ஓசூர் முதல் பொம்சந்திரா வரையிலான இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் முக்கிய அம்சங்களை விவாதித்தார்.
இத்திட்டம் குறித்த விரிவான DFR அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் (BARSYL) - Habog Consultants என்ற கூட்டணி ஏலம் மூலம் வென்ற நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் CMRL, BMRCL, BARSYL - Habog கூட்டணி ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த விவாதத்தின் போது உடனிருந்தனர்.
ஓசூர் - பெங்களூர் இன்டர்ஸ்டேட் மெட்ரோல் ரயில் திட்டத்தில், தமிழ்நாட்டில் சுமார் 11 கிலோமீட்டர் மற்றும் கர்நாடகாவில் 12 கிலோமீட்டர் ஆகிய மொத்தம் 23 கிலோமீட்டர் நீளத்தை கொண்டது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications