தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமாக இருக்கும் ஓசூர்-ல் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் வேளையில் தற்போது கர்நாடக அரசு பெங்களூரில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மட்டும் அல்லாமல் நிலத்தைத் தேடும் பணிகளைத் துவங்கியுள்ளது.
ஆனால் ஓசூர் விமான நிலையம் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் துவக்கப்படாமல் உள்ளது. ஓசூர் நகரில் தற்போது உள்நாட்டு உற்பத்தி நிறுவனம் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் முதலீடு செய்து வருகிறது. சமீபத்தில் BMW, ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கான உதிரிப்பாகம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஓசூர் விமான நிலையம் பயணிகள் விமான போக்குவரத்து மட்டும் அல்லாமல் சரக்கு போக்குவரத்துக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதேபோல் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் ஆந்திர மாநில எல்லையில் இருக்கும் காரணத்தால் ஓசூர் விமான நிலையம் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ஓசூரில் விமான நிலையம் அமைக்க ஒரு முக்கிய தடை உள்ளது.
முக்கிய தடை: மத்திய அரசு பிராந்திய விமானச் சேவை வளர்ச்சிக்காகச் சிறிய நகரங்களுக்கு விமான இணைப்பை அதிகரிப்பதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் கர்நாடக அரசுடன் செய்யப்பட்டு உள்ள ஒரு ஒப்பந்தம் ஓசூர் விமான சேவை வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
ஒப்பந்தம்: மத்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL)க்கும் இடையே செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தம் படி, 2033க்கு முன் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ. குறைவான தொலைவில் எந்தொரு புதிய அல்லது ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை (ஹாசன் மற்றும் மைசூரு விமான நிலையங்களைத் தவிர) மேம்படுத்தவோ, விரிவாக்கம் செய்யவோ கூடாது.
ஓசூர் நிலைமை: இதில் சோகமான விஷயம் என்னவென்றால் ஓசூர், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெறும் 74 கி.மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. இருப்பினும், ஓசூர்-க்கு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. சமீபத்தில், திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
வாய்ப்பு: இப்படி ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படுமாயின் 2033-க்கு பின்பு தான், இதை கருத்தில் கொண்டே தற்போது கர்நாடக அரசு தும்கூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளது.
ஓசூரில் ஏன் விமான நிலையம் தேவை?: ஓசூர், தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகும். டாடா மோட்டார்ஸ், Ashok Leyland, TVS Motors போன்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. புதிய தொழில்துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் ஓசூரில் விமான நிலையம் அவசியம்.
தற்போது, ஓசூர் வியாபாரிகள், தொழிலதிபர்கள், ஓசூருக்கு வரும் வெளிநாட்டு வல்லுனர்கள் அனைவரும் பெங்களூரு செல்ல வேண்டிய நிலை உள்ளது, இது நேர விரயத்தையும், கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்துகிறது. இதுவே ஓசூரில் விமான நிலையம் இருந்தால் வான்வழி இணைப்பு மேம்படும்.
பெங்களூரு இரண்டாவது விமான நிலையத்தின் தாக்கம் என்ன?: பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான திட்டங்கள் இருப்பது ஓசூர் விமான நிலைய திட்டத்தைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதற்காக இத்தகைய திட்டம் இருந்தாலும், இது ஓசூர்-க்கு தனி விமான நிலையத்தின் தேவையை ஒருபோதும் குறைத்துவிடாது. உண்மையில், ஓசூரின் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெங்களூரு இரண்டாவது விமான நிலையம் போதுமானதாக இருக்காது.
ஓசூர்-க்கு புதிய விமான நிலையம் அமைப்பது தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரி மாவட்டம் வரையில் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications