சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் அமெரிக்காவுக்குக் கடந்த வாரம் சென்ற முதல்வர் முக.ஸ்டாலின் - அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான அணி அந்நாட்டு தொழிற்துறையினருடன் 30க்கும் அதிகமான கூட்டங்களை நடத்தியதன் மூலம் பல வெற்றிகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
முதல்வர் ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தை நிறைவு செய்து, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை சென்னைக்குப் புறப்பட்டார். இவருடன் அரசு அதிகாரிகள், கைடென்ஸ் தமிழ்நாடு குழுவினர் என அனைவரும் சென்னைக்குக் கிளம்பிய நிலையில், சனிக்கிழமை காலையில் சென்னையில் தரையிறங்க உள்ளனர்.

முக.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் சுமார் 17 நிறுவனங்களுடன் 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்த 100க்கு 95 சதவீதம் நடைமுறைக்கு வரும் வகையிலும், வேகமாகச் செயல்படுத்தி முதலீடுகளைத் தமிழ்நாட்டு மண்ணுக்குக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் முக.ஸ்டாலின் முன்னிலையில் கடைசியாகக் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது என்பதால் சற்று ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ரேபிட் குளோபல் பிசினஸ் சலூஷன்ஸ் இன்க் (RGBSI) என்ற நிறுவனம், தமிழ்நாட்டின் ஓசூரில் ₹100 கோடி முதலீட்டில் நவீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிமேட்டிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை நிறுவ உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம், அமெரிக்காவின் சிகாகோவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு இதைத் தெரிவித்தது.
ரேபிட் குளோபல் பிசினஸ் சலூஷன்ஸ் நிறுவனம் பணியாளர் மேலாண்மை, பொறியியல், மேம்பட்ட வாழ்க்கை முறை மேலாண்மை மற்றும் IT சொல்யூஷன்ஸ் என பல்வேறு வழங்குகிறது. இதோடு பல துறைகளுக்கு அட்வான்ஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளையும் வழங்குகிறது. ஓசூருக்கு 100 கோடி ரூபாய் முதலீட்டில் வருவது இத்துறையில் இருக்கும் MSME நிறுவனங்களுக்கு பெரும் பலன் அளிக்கும்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, RGBSI தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நாணுவா சிங், தலைமை அதிகாரி ரவி குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும், ரேபிட் குளோபல் பிசினஸ் சலூஷன்ஸ் நிறுவனத்திற்கும் MoU கையெழுத்தானது.
கேட்டர்பில்லர் முதலீடு: இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு அமெரிக்காவின் கட்டுமான மற்றும் பொறியியல் உபகரணங்கள் தயாரிப்பாளரான கேட்டர்பில்லர் இன்க், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தனது தற்போதைய பிரிவுகளை 500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இது தொடர்பான ஒப்பந்தம், சிகாகோவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிக அமைச்சர் டிஆர்பி ராஜா, கேட்டர்பில்லர் இன்க் இயக்குநர் பூவன் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் மூத்த துணைத் தலைவர் கிரெக் ஹெப்லர் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications