இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் வேலைக்காகப் பெரு நகரங்களுக்குப் படையெடுக்கும் நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது எனச் சமீப காலமாகப் பேசப்பட்டு வந்தாலும், எந்த நகரத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்பது முழுமையாகத் தெரியாத நிலைமை இருந்தது. தற்போது இதுகுறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மெட்ரோ நகரங்களைக் காட்டிலும் தற்போது சிறிய டவுன் மற்றும் நகரங்களில் புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இதனால் வேலைக்காகச் சென்னை, பெங்களூர் பக்கம் ஓடும் நிலை இனி இருக்காது.

சிறிய டவுன் மற்றும் நகரங்களில் அதிகரித்து வரும் நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்யப் பல நிறுவனங்கள் குறிப்பாக முன்னணி பிராண்டுகள் தங்களின் வர்த்தகத்தை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யத் துவங்கியிருக்கும் வேளையில் அனைத்து துறையிலும், அனைத்து பிரிவிலும் அதிகப்படியான ஊழியர்களின் தேவை உருவாகியுள்ளது.
இதேவேளையில் நகரங்களில் பொருளாதார மந்தநிலை, சர்வதேச அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் நிறுவனங்கள் விரிவாக்க பணிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவதால், பெருநகரங்களில் புதிய வேலைவாய்ப்புகள் அளவீடு குறைந்துள்ளது என டீம்லீஸ் சர்வீசஸ், Xpheno மற்றும் Foundit போன்ற பணியாளர் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதன் படி செப்டம்பர் காலாண்டில் ராஜ்புரா, குஷைகுடா, ஓசூர், லூதியானா, ஜோத்பூர், ஜபல்பூர், கல்வாரா, ஜிராக்பூர் ஆகிய சிறிய டவுன் மற்றும் நகரங்களில் புதிய வேலைவாய்ப்பு என்பது வருடாந்திர அடிப்படையில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நகரங்களில் ஈகாமர்ஸ், உற்பத்தி, BFSI, டெலிகாம் ஆகிய துறையில் வொயிட் காலர் மற்றும் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகியுள்ளது. மெட்ரோ நகரங்களில் இதே துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் 5 சதவீதம் சரிந்துள்ளது என டீம்லீஸ் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.
மேலும் அக்டோபர் மாதத்தில் சிறிய டவுன் மற்றும் நகரங்களில் உருவாகியிருக்கும் வொயிட் காலர் வேலைவாய்ப்புகளைப் பார்க்கும் போது 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது என Xpheno அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டில் உற்பத்தி துறையில் ஓசூர் அசத்தி வருவது மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பெரும்பாலான ஓசூர் நிறுவனங்கள் விரிவாக்க பணிகளில் இருக்கும் காரணத்தால் அனைத்து மட்டத்திலும் ஊழியர்களின் தேவை உள்ளது. இதேபோல் ஓசூரில் அதிகப்படியான MSME நிறுவனங்கள் இருக்கும் காரணத்தால் இந்திய உற்பத்தி துறைக்கு முதுகெலும்பாக உள்ளது.
மறுமுனையில் சேவை துறையில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் கலக்கி வருகிறது. ஐடி, டிஜிட்டல் சேவைகள், ஆட்டோமேஷன், ஐடீஸ் ஆகிய பிரிவில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்து அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications