சீனாவுக்கு இணையாக இந்தியாவும் பெரும் உற்பத்தி நாடாக மாற வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களையும், முதலீடுகளையும் ஈர்ப்பதை முக்கிய இலக்காகக் கொண்டு அனைத்து மாநிலங்களும் இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பகுதி ஏற்கனவே உற்பத்தியைச் சார்ந்து இருக்கும் காரணத்தால் புதிதாக வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களை ஈர்ப்பது மிகவும் எளிதாக இருந்தது. இதனால் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகப்படியான உற்பத்தி நிறுவனங்களை ஈர்த்து அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும், ஏற்றுமதி வருமானத்தையும் பெற்று வருகிறது தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் உற்பத்தி ஹப் ஆக விளங்கும் ஓசூரில் அசோக் லேய்லாண்ட் முதல் டாடா எலக்ட்ரானிக்ஸ் வரையில் பல தொழிற்சாலைகள் இருப்பது மட்டும் அல்லாமல் MSME நிறுவனங்களின் களஞ்சியமாகவும் விளங்குகிறது.
2022 ஆம் ஆண்டில் ஓசூரில் மைக்ரோ பிளாஸ்ட்க்ஸ் நிறுவனம் சுமார் 7 லட்சம் சதுரடியில் மிகப்பெரிய பொம்மை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீப் பிளாஸ்டிக் பொம்மைகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பொம்மை உற்பத்தி-க்குத் தனிப்பட்ட கவனத்தைக் கொடுத்தது.
இப்படி ஓசூரில் 500 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மைக்ரோ பிளாஸ்ட்க்ஸ் நிறுவனத்தின் பொம்மை தொழிற்சாலை தான் இந்தியாவின் மிகப்பெரிய பொம்மை தொழிற்சாலையாக இருப்பது மட்டும் அல்லாமல் இத்தொழிற்சாலையில் சுமார் 6000 பேருக்கு அடுத்த 3-4 வருடத்தில் பணியாற்றும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் மைக்ரோ பிளாஸ்ட்க்ஸ் தொழிற்சாலையின் பிரம்மாண்ட போட்டோ தற்போது வெளியாகி பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி தான் தற்போது தமிழ்நாட்டின் புதிய உற்பத்தி ஹப் ஆக மாறியுள்ளது.
ஏற்றுமதியைச் சார்ந்து வரும் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் சென்னை, தூத்துக்குடி எனத் துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் பகுதிகளில் தொழிற்சாலையை அமைக்கிறது. உள்நாட்டு வர்த்தகம், உள்நாட்டு நிறுவனங்களுக்கான சப்ளையராக இருக்கும் நிறுவனங்கள் ஓசூர், தர்மபுரி, கோவை, மதுரை, திருச்சி என நெடுஞ்சாலை மற்றும் திறன் வாய்ந்த ஊழியர்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்கிறது.


Click it and Unblock the Notifications