தமிழ்நாடு மக்களும், பெங்களூர் மக்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ஓசூர் ஏர்போர்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வந்துள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணையம் (AAI), ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்து இடங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், இரண்டு இடங்களை AAI தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள் உடன் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், மாநிலத்தில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அடுத்த மெகா உள்கட்டமைப்பு திட்டமான ஓசூர் விமான நிலையத்தில் சரக்கு கிராமங்களை (Cargo Village) நிறுவ சமீபத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏஏஐ அமைப்பு விமான நிலைமை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இடங்கள்:
TAAL ஏரோட்ரோம்: இந்த இடம் விமான நிலையம் அமைக்க சிறந்த இடமாக AAI கருதப்படுகிறது. இது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏரோட்ரோம், இங்கு ஏற்கனவே விமான தொடர்பான பல சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பழுது பார்க்கும் பணிகள், விமானத்திற்கு பெயின்டிங் செய்யும் பணிகள், விமான சோதனை, போன்றவை நடந்து வருகிறது.
ஓசூர் விமான ஏர்ஸ்டிர்ப் தெற்கே 2 கி.மீ தொலைவில், பெலகொண்டபள்ளி: இந்த இடம் TAAL ஏரோட்ரோம் அருகில் அமைந்துள்ளது. முதல் இடம் சாத்தியமில்லாத பட்சத்தில் இது மாற்று இடமாக கருதப்படுகிறது. இங்கு ஆரம்ப கட்டமைப்பு முதல் அனைத்தையும் புதிதாக அமைக்கப்பட வேண்டும்.
இந்த இரண்டு இடமும் பெங்களூருக்கு அருகில் இருக்கும் காரணத்தாலும், ஓசூர் நகரின் மைய பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் காரணத்தால் ஓசூர் வளர்ச்சிக்கு பெரிய அளவில் பயனளிக்கும். AAI மற்ற மூன்று இடங்கள் ஏற்றதாக இல்லை அறிவித்து தேர்வு செய்யப்படவில்லை. இந்த தேர்வு செய்யப்படாத இடத்தின் விபரங்கள்.
- ஓசூர் விமான நிலையத்திற்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் தோகாரை அக்ரஹாரம் அருகில் ஒரு இடம்
- ஓசூர் விமான நிலையத்திற்கு தென்கிழக்கே 27 கி.மீ தொலைவில் சூளகிரி பகுதியில் உலகம் அருகில் ஒரு இடம்
- ஓசூர் விமான நிலையத்திற்கு வடகிழக்கே 16 கி.மீ தொலைவில் தசப்பள்ளி அருகில் ஒரு இடம்
இப்படி மொத்தம் 5 இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்யப்பட்டு AAI அமைப்பிடம் சமர்ப்பித்தது. இதில் 2 இடங்களை தற்போது AAI அமைப்பு தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு TAAL ஏரோட்ரோம் அல்லது அதற்கு அருகிலுள்ள 2 கி.மீ இடத்தை தேர்வு செய்வதை ஒரு சிறந்த முடிவாக இகுக்கும் என அறிவித்துள்ளது. AAI அமைப்பு விரைவில் அடுத்தக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு இறுதி இடத்தை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய தொழில்நகராமான ஒசூரின் வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 3 கோடி விமான பயணிகள் பயணம் மேற்கொள்ளும் வகையில் பிரம்மாண்ட இண்டர்நேஷ்னல் விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை மாதம் அறிவித்தார்.
இந்த விமான நிலையம் ஓசூர் மக்களுக்கும், ஓசூர் தொழிற்துறை பகுதிக்கு மட்டும் அல்லாமல் பெங்களூருவின் ஐடி தொழில்நுட்ப பகுதிக்கும், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மற்றும் தமிழ்நாடு எல்லைப்புற பகுதிகளுக்கு பெரும் பலன்களை அளிக்கும். பெங்களூரு கெம்பவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் இருந்து செல்வதற்கு 60 கிமீ பயணிக்க வேண்டும், இது தெற்கு பெங்களூர் பகுதியில் இருக்கும் மக்கள் டிராபிக்கில் விமான நிலையம் செல்ல வேண்டுமானியின் இது பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications