தமிழ்நாடு அரசு ஓசூரில் பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்கும் முடிவு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமான நிலையம் கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கும் பெரிய அளவில் பயனுள்ளதாக இருப்பது மட்டும் அல்லாமல் பெங்களூருக்கும் மிக முக்கியமானது.
ஆம் பெங்களூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வர்த்தக பகுதியும், ஐடி சேவை துறையின் ஹாப் ஆக விளங்கும் எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் பெங்களூர் தென்கிழக்கு பகுதிகளுக்கும் பெரும் பலனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூரில் அமைக்கப்படும் இந்த புதிய கிரீன்ஃபீல்ட் பன்னாட்டு விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டது. இது 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமையும் எனத் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூரில் அமைய உள்ள இந்த புதிய விமான நிலையம், இன்ஃபோசிஸ், பயோகான் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்கள் கொண்ட எலக்ட்ரானிக் சிட்டிக்கும், சந்தாபுரா மற்றும் ஆத்திபலே போன்ற பெங்களூரின் எல்லைப்புற பகுதிகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஓசூர் சாலை மற்றும் பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் சாலை பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கும் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பை ஒசூர் விமான நிலையம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் எலக்ட்ரானிக் சிட்டி தொழில்துறை டவுன்ஷிப் அத்தாரிட்டி-யின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ரவிந்திர சிங் கூறுகையில், சுமார் 3 லட்சம் பேர் எலக்ட்ரானிக் சிட்டியில் பணிபுரிந்து வருகின்றனர். பெங்களூர் விமான நிலையத்தை போல், ஓசூர் விமான நிலையத்திற்கு பெங்களூரு போக்குவரத்து நெரிசலை கடந்து செல்ல வேண்டியதில்லை என்பதால், இது மிகவும் வசதியாக இருக்கும் மற்றும் பயண நேரத்தைக் குறைக்கும்.
இதேபோல் பெங்களூரில் ஓசூர் சாலையில் பல உற்பத்தி நிறுவனங்களும், ஐடி சேவை நிறுவனங்களும் உள்ளது, இதன் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் ஓசூர் விமான நிலையத்தில் இருந்து எளிதாக வந்து செல்ல முடியும். இது சரக்கு போக்குவரத்திற்கும் பெரும் உந்துதலை அளிக்கும்" என்றார்.
பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு அதிகப்படியான மக்கள் வரும் காரணத்தால் சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஹெலிகாப்டர் சேவை பயன்பாட்டில் இருந்தது. இன்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஹெலிகாப்டர் தரையிரங்கும் இடம் உள்ளது. இதேபோல் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒரு பிரபல அப்பார்ட்மென்ட் கட்டிடத்தின் மீது ஹெலிபேட்-ம் உள்ளது.
இவை அனைத்திற்கும் காரணம் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற முக்கியமான தொழில்நுட்ப பகுதிகள் பெங்களூரின் ஒரு மூலையில் இருக்கும் போது விமான நிலையம் மற்றொரு மூலையில் இருப்பது தான். தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
ஓசூர் விமான நிலையம் எங்கு அமையப்போகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி அருகே அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசூர் விமான நிலையத்தின் மூலம் பெங்களூர் தென் பகுதிக்கான தேவையை பூர்த்தி செய்துவிடுவதாலேயே, கர்நாடகா அரசு தும்கூர்-ல் 2வது விமான நிலையத்தை அமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. இல்லையெனில் பீனியா போன்ற இடத்தில் 2வது விமான நிலையத்தை அமைத்திருக்கும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications