தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை பகுதியாக இருக்கும் ஒசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த ஓசூர் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ஓசூர் மக்களை மட்டும் அல்லாமல் பெங்களூர் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் பெங்களூர் விமான நிலையம் ஆந்திர மாநிலத்தின் எல்லைப் பகுதியில் உள்ளது. பெங்களூரின் மத்திய பகுதியில் அல்லது தெற்கு பகுதிகளில் இருந்து விமான நிலையம் செல்ல வேண்டுமாயின் குறைந்தது 2.30 மணிநேரம் முதல் 3.30 மணி நேரமாகும்.
இதுவே டிராபிக் நேரத்திலோ அல்லது மழை நேரத்திலோ கிளம்பினால் அவ்வளவு தான் பிளைட் பிடிப்பது ரொம்ப கஷ்டமாகிவிடும். இதை அனைத்தையும் தீர்க்கும் வண்ணம் ஓசூர் விமான நிலையம் உருவாக உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கும் பெங்களூர் விமான நிலையத்தின் நிர்வாகத்திற்கும் மத்தியில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இது ஓசூர் விமான நிலையம் உருவாக பெரும் தடையாக இருக்கும்.
மத்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL)க்கும் இடையே செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தத்தின் படி, 2033க்கு முன் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ. குறைவான தொலைவில் எந்தொரு புதிய அல்லது ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை (ஹாசன் மற்றும் மைசூரு விமான நிலையங்களைத் தவிர) மேம்படுத்தவோ, விரிவாக்கம் செய்யவோ கூடாது என்பது தான்.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் ஓசூர், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெறும் 74 கி.மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. இதனால் இந்த ஒப்பந்தத்தை மீறி மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா..? என்பது முக்கிய கேள்வி. இதேபோல் தமிழ்நாடு அரசு இந்த திட்டம் எப்போதும் முடிவு பெறும் என்பது பற்றியோ, இலக்கையோ முதல்வர் முக.ஸ்டாலின் இன்று அறிவிக்கவில்லை.
மத்திய அரசு பிராந்திய விமானச் சேவை வளர்ச்சிக்காகச் சிறிய நகரங்களுக்கு விமான இணைப்பை அதிகரிப்பதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்ட போது இந்த ஒப்பந்தம் காரணமாக ஓசூர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இதேவேளையில் மத்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL)க்கும் இடையே செய்யப்பட்டு ஒப்பந்தம் 2033ல் முடியும் காரணத்தால் அடுத்த 9 வருடத்தில் பெங்களூர் அருகே தும்கூர் பகுதியில் 2வது விமான நிலையத்தை அமைக்கும் பணிகளைச் சமீபத்தில் கர்நாடக அரசு துவங்கி நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளைத் துவங்கியது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications