தமிழ்நாடு அரசு ஓசூர் அருகே சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக சுமார் 2,300 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு கிரீன்பீல்டு விமான நிலைய திட்டமாக மேம்படுத்த முடிவு செய்து இதற்கான பணிகளை விரைவாக செய்து வருகிறது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 150 கிலோமீட்டருக்கு சுற்றளவு பகுதியிலும், 2033 வரையிலும் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது என்ற கட்டுபாடு இருக்கும் வேளையில் பல போராட்டங்களுக்கு பின்பு தமிழ்நாடு அரசு 4 இடங்களை சேர்வு செய்து பல கட்ட ஆய்வுகளுக்கு பின்பு ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது.

புதிய விமான நிலையம் அமைக்கப்படும் இடம் பேரிகை - பாகலூர் பகுதியில் அமைந்துள்ளது, இது பெங்களூர்- கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளி-யில் இருந்து 26.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்த விமான நிலையில் Bengaluru Satellite Town Ring Road அருகில் அமைந்துள்ளதால் பெங்களூர் - ஓசூர் மக்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்.
இந்த நிலையில் இந்த விமான நிலைய திட்டத்திற்கான இட அனுமதி (site clearance) விண்ணப்பத்தை அடுத்த இரண்டு வாரங்களில் மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது விமான நிலைய கட்டுமான திட்டத்தின் முதல் கட்ட ஒப்புதலாகும். மத்திய அரசிடம் இரண்டு கட்ட அங்கீகாரங்கள் தேவை. முதலில் இட அனுமதி, பின்னர் கொள்கை ரீதியான அனுமதி. இத்தகைய திட்டங்களுக்கான அனுமதி பெற நீண்ட காலம் தேவை என்பதால் தமிழ்நாடு அரசு விரைவாக விண்ணப்பிக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு அடுத்த நான்கு மாதங்களில் நிலம் கையகப்படுத்தல் செயல்முறையை தொடங்க திட்டமிட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் இதை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் நில வளர்ச்சி திட்டத்தை (LDP) தயாரித்து வருகிறது. இது ஒசூர் சர்வதேச விமான நிலைய திட்டத்தின் அடித்தளமாக அமையும்.
கர்நாடக அரசு பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கவும், பழைய HAL விமான நிலையத்தை செயல்படுத்தவும் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் ஆந்திர பிரதேச அரசு குப்பம் பகுதியில் விமான நிலையம் அமைக்க பரிசீலித்து வருகிறது. இது ஓசூர் மற்றும் பெங்களூருக்கு அருகில் உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications