இந்திய விமானத் துறை வளர்ச்சியில் ஓசூர் சர்வதேச விமான நிலையம் முக்கிய இடம் பெற உள்ள நிலையில், பல நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே ஓசூர் விமான நிலையத்திற்கு பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் காரணத்தால் விமான நிலையம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் UDAN திட்டத்தில் இருந்து ஓசூர் விமான நிலையம் நீக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு UDAN திட்டத்தின் கீழ் ஓசூர் விமான நிலையம் அமைக்கம் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இதற்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (BIAL) ஒப்பந்தத்தில் உள்ள 150 கிமீ தடை நிபந்தனை காரணமாக உள்ளது. ஓசூர் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளதாலும், 2033 வரை 150 கிமீ தொலைவிற்குள் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது.

மத்திய அரசுக்கும் - BIAL மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் படி 2033 வரை பெங்களூரு விமான நிலையத்திற்கு 150 கி.மீ. சுற்றளவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது. ஓசூர் 80 கி.மீ. தொலைவில் இருப்பதால் UDAN திட்டத்தின் முதல் சுற்றில் சென்னை-ஓசூர் விமானப் பாதை ஒப்புதல் பெறவில்லை.
ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் முரலிதர் மோஹோல் தெரிவித்தது போல், இந்த ஒப்பந்த நிபந்தனை காரணமாக ஓசூர் UDAN பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் இருக்கும் தனியார் விமான நிலையங்களை பாதுகாக்கும் நிபந்தனை என்று அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பெங்களூர் எல்லைக்கு அருகில் ஓசூர் கிழக்கே சூளகிரியில் பேரிகை - பாகலூர் பகுதியில் 2,300 ஏக்கர் நிலத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க UDAN திட்டத்தின் கீழ் நிதியை கோரவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஓசூர் விமான நிலையத்தை தனியார் முதலீட்டாளர்களை ஈர்த்து இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் மத்திய அரசின் UDAN திட்டத்தின் கீழ் வேலூர் மற்றும் நெய்வேலி விமான நிலையங்களின் உரிமம் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றுக்கு 84.9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
BIAL ஒப்பந்தம் 2033-ல் முடிவடையும் நிலையிஸ், அதுவரை மத்திய அரசுக்கும் - BIAL மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்ய முடியாது என்றால் தமிழ்நாடு 2033 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications