அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தக போரில் அதிகம் பலனடைந்த நாடு இந்தியா என்றால் மிகையில்லை, ஆப்பிள் முதல் மைக்ரான் வரையில் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்து தொழிற்சாலை அமைத்து வருகிறது.
இதில் முக்கியமாக ஆப்பிள் நிறுவனத்தின் வருகை மிகவும் முக்கியமானது, ஆப்பிள் மற்றும் அதன் சப்ளையர்கள், கூட்டணி நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் இதுவரையில் 1.5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் உற்பத்திக்குப் பக்க பலமாக இருப்பது டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். முதலில் அசம்பிள் மட்டுமே செய்து வந்த இந்நிறுவனம் தற்போது விஸ்திரான் தொழிற்சாலையைக் கைப்பற்றியதன் மூலம் முழு ஐபோனையும் தயாரிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் அசம்பிள் பணியில் அசத்தினாலும், இன்னும் பல பொருட்களை சீனாவில் இருந்து வாங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று ஐபோன் கேசிங் செய்வதற்கான இயந்திரங்கள், டாடா குழுமம் இந்த இயந்திரங்களைச் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது.
சீனாவை மொத்தமாக ஓரம்கட்ட முடிவு செய்த டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஆப்பிள் ஐபோனுக்கான கேசிங் உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வந்தாலும், ஐபோன் கேசிங்-களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மிகவும் சிக்கலான மற்றும் துல்லியமான இயந்திரங்களை இந்தியாவிலேயே உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதுவரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த இந்த இயந்திரங்களை, இந்தியாவிலேயே உருவாக்கும் திட்டத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, இரண்டு இந்திய உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், இந்த சிக்கலான இயந்திரங்களை ஏற்றுமதி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்காக ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பணிகளில் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். டாடா குழுமம் உற்பத்தி முதல் டெக் வரையில் அனைத்து கட்டமைப்பையும் தன்னிடம் கொண்டு உள்ளதால் இப்பிரிவில் வெற்றி என்பது மிகவும் சாதாரணம் ஆனால் சீன இயந்திரங்களுக்கு இணையான துல்லியம் கொண்டு வர சில காலம் தேவைப்படலாம்.
டாடா குழுமம், தங்கள் ஓசூர் ஆலை வளாகத்தில் படிப்படியாக இந்த இயந்திரங்களைச் சோதனை செய்து வருகிறது, என்று இந்த விவரங்களுக்கான தகவல் கிடைத்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்த முயற்சி, இந்தியாவில் மின்னணு உற்பத்தியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், இது போன்ற சிக்கலான இயந்திரங்களை உருவாக்கும் திறனை வளர்த்து, ஏற்றுமதி சார்ந்த வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று தொழில் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
டாடா குழுமம் டைட்டன் நிறுவனத்தின் வாயிலாக ஏற்கனவே Precision இயந்திரங்களை உருவாக்குவதிலும், இயக்குவதிலும் திறமை பெற்று உள்ளது. தற்போது ஐபோன் கேசிங் தயாரிப்பதற்கான இயந்திரத்தை உருவாக்குவதன் மூலம் Precision இயந்திர துறையில் அடுத்தகட்டத்திற்கு முன்னேற உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications