தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறை பகுதியாக இருக்கும் ஓசூரில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை காலையில் தீ விபத்து நடந்தது அனைவருக்கும் தெரியும். இந்த தீவிபத்துக்கு பின்பு தொழிற்சாலையில் எவ்விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறாத நிலையில், இன்று முக்கியமான தகவல் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் இருந்து வந்துள்ளது.
ஆப்பிள் ஐபோன்-க்கான பாகங்களைத் தயாரிக்கும் முக்கிய தொழிற்சாலை தான் இந்த டாடா எலக்ட்ரானிக்ஸ். இத்தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்படும் ஐபோன் மாடியூல்களை பாக்ஸ்கான் முதல் சீன நிறுவனங்கள் வரையில் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஓசூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து அதன் உற்பத்தியை பாதித்தது மட்டும் அல்லாமல் மீண்டும் சீன நிறுவனத்தை நம்பி இயங்கி வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் டாடா நிர்வாகம் எப்படியாவது வேகமாக உற்பத்தி பணிகளைத் துவங்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் செயல்பட்ட நிலையில், தீவிபத்தால் பாதிக்கப்பட்ட ஆலையில் சில பணிகளை மீண்டும் தொடங்குவதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில் ஓசூர் தொழிற்சாலையில் இருக்கும் ஆறு பிரிவுகளில் ஒன்றில் தீ பற்றியது, இதை தீ விபத்து உற்பத்தி பணிக்காகப் பயன்படுத்தும் கெமிக்கல்ஸ் இருக்கும் குடோனில் ஏற்பட்டது. பல மணிநேரம் போராட்டத்திற்குப் பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மொத்தமாக தீ அணைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் இருக்கும் இடர்பாடுகளை நீக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் இத்தொழிற்சாலையில் சில பகுதிகளில் வேலையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் முழு சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இத்தொழிற்சாலையில் எப்படி தீவிபத்து நடந்தது என்பதற்கான காரணத்தைக் கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகள் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. தீ விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்பு எண்ணிக்கை பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் அதன் சப்ளை செயினில் குறிப்பிடத்தக்கப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக இது பண்டிகை காலம் என்பதால் ஐபோன் தயாரிப்பில் ஏற்பட்ட சுணக்கம் கட்டாயம் விற்பனையில் எதிரொலிக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications