ஓசூரில் உள்ள மாபெரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடத்திய விசாரணையில், தொழிற்சாலையில் உள்ள அனோடைசிங் யூனிட்-ல் (Anodising plant) உள்ள ஒரு குளத்தில் இருக்கும் தெர்மோஸ்டாட் கட்டுப்பாட்டு (thermostat control) அமைப்பு செயலிழப்பு வாயிலாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் என்பது அரசாங்கத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 28 அன்று ஏற்பட்ட தீ, அனோடைசிங் தொழிற்சாலையில் இருக்கும் ஏர் டக்ட் வாயிலாக பரவி, அனோடைசிங் தொழிற்சாலையை முற்றிலும் தீ பரவி பெரும் சேதத்திற்கு வழிவகுத்துள்ளது என்று விசாரணையில் முதன்மை காரணமாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விசாரணை முடிவுகளை தமிழ்நாடு அரசு சார்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகத்திற்கும் பகிரப்பட்டு உள்ளது.

இது ஆரம்ப மதிப்பீடு என்றாலும், சம்பவத்தின் துல்லியமான காரணங்களை உறுதிப்படுத்தும் வகையில் மேற்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகம் இதுக்குறித்து எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை.
விசாரணை முடிந்ததும், விபத்து குறித்த விரிவான அறிக்கை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்திற்கு (DISH) சமர்ப்பிக்கப்படும். இருப்பினும், தீயால் சேதமடைந்த இடத்தில் இருந்து இடிபாடுகளை அகற்ற வேண்டியதால், இந்த செயல்முறை சிறிது காலம் தேவைப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது தீ விபத்து மூலம் ஏற்பட்ட சேதத்திற்கு காப்பீட்டு இழப்பை பெறுவதற்காக தனிப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறகு. இதேவேளையில் தீயால் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகள் நிலையற்ற நிலையில் உள்ளதாலும் அரசின் விசாரணை முடிக்க கூடுதல் காலஅவகாசம் தேவைப்படும்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி தீ விபத்திற்கு பின்பு சில நாட்கள் ஆலையில் உற்பத்தி பணிகள் முடங்கியிருந்தாலும், தற்போது பணிகள் துவங்கியுள்ளது, ஆனால் இன்னும் முழு உற்பத்தி திறனை அடையவில்லை.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications