ஓசூர் டாடா தொழிற்சாலை.. நினைத்தது ஒன்னு, நடப்பது ஒன்னு.. சீன மேலிடத்தை சமாளிக்க முடியல..!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், போன் தயாரிப்பில் சாம்சங் உடனும், தொழில்நுட்பத்தில் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் போட்டிப்போட்டு வருகிறது. இந்தியாவின் துணையுடன் சர்வதேச சந்தையை பிடிக்க ஆப்பிள் டாடா குழுமத்துடன் கைகோர்த்தது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரித்து மேக் இன் இந்தியா திட்டத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் டாடா குழுமம் ஓசூரில் புதிய தொழிற்சாலையை அமைத்தது. இந்த தொழிற்சாலையில் டாடா குழுமம் ஐபோன்-ஐ தயாரிக்கும் பணிகளை நடந்து வருகிறது, டாடா தொழிற்சாலை செயல்பாடுகள் ஆப்பிள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

ஓசூர் டாடா தொழிற்சாலை.. நினைத்தது ஒன்னு, நடப்பது ஒன்னு.. சீன மேலிடத்தை சமாளிக்க முடியல..!

டாடா குழுமம் ஓசூர் தொழிற்சாலையில் என்ன செய்கிறது..? சீனா-வை ஏன் சமாளிக்க முடியவில்லை..? ஆப்பிள்-ன் முக்கிய கண்டிஷன்..!!

ஆப்பிள் பொருட்களின் விலை அதிகமாக இருக்க முக்கியமான காரணம் அதன் தயாரிப்பின் டிசைன் மற்றும் Build quality, அதன் பின்பு தான் சாப்ட்வேர், இதர சேவைகள்.. எந்த காரணத்திற்காகவும் டிசைன் மற்றும் Build quality-ஐ சமரசம் செய்துக்கொள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு இதுநாள் வரையில் சீனா கேட்டதை கொடுத்து வந்தது.

ஆனால் ஆப்பிள் இந்தியாவுக்கு தனது உற்பத்தி தளத்தை மாற்றி வரும் வேளையில் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக ஓசூர் டாடா தொழிற்சாலை மூலம் தனது மாபெரும் இலக்கை அடைய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது ஆப்பிள், ஓசூர் டாடா தொழிற்சாலை-யில் என்ன நடக்கிறது.

ஆப்பிள் கட்டளையின் படி டாடா தொழிற்சாலைக்கு சீனாவின் Taishan City Aluminium Manufacturing Co. அல்லது Hodaka நிறுவனத்தில் இருந்து லைட் வெயிட் அலுமினியம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுமினியத்தில் அதிநவீன மற்றும் துல்லியமான அளவுகளில் இயங்கும் CNC இயந்திரங்கள் கொண்டு பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுகிறது.

ஓசூர் டாடா தொழிற்சாலை-யில் சிறிய brackets, ஸ்குரூ, கேமரா மற்றும் input-output USB port-க்கான கட்அவுட் ஆகியவற்றுக்கு அசம்பிளி செய்யப்பட்டு சீனாவுக்கு அனுப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் semi-finished phone-களின் தரம், அசம்பிள் செய்யப்பட்ட முறையில் பிரச்சனை இருக்கும் காரணமாக 2 அல்லது 3 முறை ஒரு பொருட்கள் இந்தியாவுக்கும், சீன பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது என இத்தொழிற்சாலையின் சப்ளை செயின் அதிகாரிகள் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளனர்.

ஓசூர் டாடா தொழிற்சாலை.. நினைத்தது ஒன்னு, நடப்பது ஒன்னு.. சீன மேலிடத்தை சமாளிக்க முடியல..!

இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் ஓசூர் டாடா தொழிற்சாலை-யில் தயாரிக்கப்படும் semi-finished phone-களுக்கு தேவையான brackets, industrial glues, screws, mesh, pressure sensitive adhesives மற்றும் உலோக உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

வெறும் 10 - 15 சதவீத பொருட்கள் மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்கிறது, அதிலும் முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்களான Merck Life Sciences மற்றும் Thermo Fisher Scientific ஆகியவையிடம் வாங்குகிறது. இதோடு முருகப்பா குழுமத்தின் Carborundum Universal Ltd நிறுவனத்தில் இருந்து டாடா எலக்ட்ரானிக்ஸ் அலுமினா வாங்குகிறது.

டாடா தனது அசம்பிளி பணிகளை தொடர்ந்து மேம்படுத்தி வந்தாலும் சீனாவின் பாக்ஸ்கான் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் ஆப்பிள் - டாடா மத்தியிலான உறவின் நிலை பாதிக்குமா என்ற கேள்வியும் வருகிறது. சமீபத்தில் ஆப்பிள்-ன் முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான பாக்ஸ்தான் பெங்களூரில் மாபெரும் தொழிற்சாலையை அமைக்க தயாராகியுள்ளது. இதற்காக நிலத்தையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓசூர் டாடா தொழிற்சாலை.. நினைத்தது ஒன்னு, நடப்பது ஒன்னு.. சீன மேலிடத்தை சமாளிக்க முடியல..!

டாடா ஓசூர் தொழிற்சாலை மூலம் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையும் புதிய உச்சத்திற்கு செல்லும், இப்பிரிவில் இந்திய நிறுவனத்தின் ஆதிக்கம் வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதேபோல் மேக் இன் இந்தியா உச்சம் பெறும் என நினைத்தால் டாடா ஓசூர் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் 90 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+