கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக இருந்து வருகிறது. பெங்களூருக்கு அருகிலேயே இருப்பது ஓசூர் நகரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ். பெங்களூருவில் அலுவலகங்களை அமைத்திருக்கக்கூடிய நிறுவனங்கள் பலவும் தங்களுடைய ஆலைகளை ஓசூரில் அமைத்திருக்கின்றன. இது தவிர பெங்களூருடன் ஒப்பிடும்போது ஓசூரில் செலவீனங்கள் குறைவாக இருப்பதால் ஏராளமானவர்கள் ஓசூரில் தங்கி கொண்டு தினம்தோறும் பெங்களூருக்கு வேலைக்கு சென்று வந்த வண்ணம் இருக்கின்றனர்.
உற்பத்தி ரீதியாகவும் மிகச்சிறந்த நகரமாக ஓசூர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. ஓசூரில் தான் டாடாவின் ஐபோன் உற்பத்தி ஆலை செயல்படுகிறது. ஓலா, ஏதர் நிறுவனங்களின் மின்சார வாகன ஆலைகள், டிவிஎஸ் , அசோக் லேலண்ட், டைட்டன் என பல பெரிய நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் ஓசூரில் தான் உள்ளன.

3000க்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைந்திருக்கக் கூடிய ஓசூர் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு நகரமாக இருந்து வருகிறது. எனவே ஓசூருக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஓசூருக்கு என பிரத்தியேகமாக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் அப்போது வெளியிடப்பட்டது.
மற்றொருபுறம் ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளையும் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. இதுநாள் வரை ஐடி வேலைக்காக ஓசூரை கடந்த பெங்களூருக்கு சென்றவர்கள் எல்லாம் மீண்டும் ஓசூருக்கே திரும்பி வரவைக்கும் நோக்கிலான ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் மாதம் ஓசூர் நகரில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பை தொடர்ந்து புதிய அப்டேட் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
டைடல் நிர்வாகம் ஓசூரில் டைடல் பார்க் அமைப்பது தொடர்பான ஒப்பந்த புள்ளிகள் கோரி இருக்கிறது. இதன்படி ஓசூரில் ஐந்து லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைதளத்தோடு கூடிய ஒன்பது தளங்கள் கொண்டதாக இந்த டைடல் பூங்கா என்பது அமைக்கப்பட இருக்கிறது. ஓசூரில் இந்த டைடல் பூங்காவிற்கான ஒப்பந்த புள்ளி தற்போது கோரப்பட்டு இருக்கிறது. இதற்கான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்த புள்ளி வழங்கப்படும்.
அதன் பிறகு கட்டுமான பணி நடைபெற்ற இந்த டைடல் பூங்கா பயன்பாட்டிற்கு வரும் போது பெங்களூரில் செயல்படக்கூடிய ஏராளமான ஐடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓசுருக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு டைடல் பூங்காவில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்கிறது என்றால் ஐடி துறை சார்ந்த வேலை வாய்ப்புகளும் ஓசூரில் பெருகும். இது ஒட்டுமொத்தமாகவே அந்த நகரத்தின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications