திமுக அரசு வான்வழி அமைப்புகளுக்கான மையத்தை (CABS - Centre for Airborne Systems) ஒசூரில் அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு தொடர்ந்து முன்னெடுத்து வெற்றிக்கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஒசூரில் அமைய இருந்த இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நடுத்தர ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் (AMCA) விமான சோதனை மற்றும் வடிவமைப்பு மையம், கைநழுவி ஆந்திர பிரதேச மாநிலத்தின் புட்டபர்த்திக்கு சென்றது, தற்போது CABS அமைப்பை தீவிர முயற்சியின் காரணமாக ஈர்த்துள்ளது.

பாதுகாப்புத் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில், ஓசூரில் புதிய வான்வழி அமைப்பு மையத்தை அமைக்கும் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த CABS மையத்தை, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ (TIDCO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இணைந்து உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய CABS மையத்தில் கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் வான்வழி கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சி, சோதனை மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதோடு ராணுவத் தேவைகளுக்கான நவீன வான்வழி அமைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
ஓசூர் ஏற்கனவே உற்பத்தி நகரமாக இருந்தாலும் ஆட்டோமொபைல், தொழிற்துறை, MSME நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவே இருந்து வருகிறது. தற்போது CABS அமைப்பு வருவது மூலம் ஓசூர் விமான மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு புதிய அடையாளமாக மாற உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த டிட்கோ மற்றும் டிஆர்டிஓ இணைந்து பணியாற்றி வருகின்றன.


Click it and Unblock the Notifications