சென்னை: இந்தியாவில் கடந்த 10 வருடங்களாகவே சொந்தமாக வீடு வாங்குவது நல்லதா அல்லது வாடகைக்கு வசிப்பது நல்லதா என்ற விவாதம் சமூக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் Finfluencers ஆக மாறிய பின்பு இந்த விவாதம் அதிகரித்துள்ளது. காலம் காலமாக மண், பொன் மீது மக்கள் அதிகப்படியான முதலீடுகளை செய்து வரும் வேளையில் இந்த கருத்து பலரும் ஏற்க மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு முதலீட்டாளர் மற்றும் ஒரு டெக் நிறுவனத்தின் சிஇஓ இடையே டிவிட்டரில் நடந்த கருத்து மோதல், டிவிட்டரில் அனல் பறக்கும் விவாதமாக உருவெடுத்துள்ளது. இதில் முக்கியாக மிடில் கிளாஸ் மக்கள் எப்போதும் மிடில் கிளாஸ் மக்களாகவே இருப்பதற்கு சொந்த வீடு வாங்குவது தான் காரணம் என பேசியது நாடு முழுக்க பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. இவை அனைத்திற்கும் துவக்கம் ஒரேயொரு டிவிட்டர் பதிவு.

முதலீட்டாளரான கிரண் ராஜபுட் தனது டிவிட்டர் பக்கத்தில், "50 ஆண்டுகளுக்கு முன்பு நடுத்தர வர்க்கத்தின் ஆசை சொந்த வீடு வாங்குவதாக இருந்தது. இன்றும் அதுதான். அதனால் தான் பல நடுத்தர வர்க்கத்தினர் நடுத்தர வர்க்கமாகவே இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த கிரேலேப்ஸ் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ அமன் கோயல், "நீங்கள் வசிக்கும் வீட்டிலிருந்து வீட்டு உரிமையாளரால் வெளியேற்றப்படுவதை விட மோசமானது எதுவும் இல்லை. நிதி ஆலோசகர்களின் (Finfluencers) பேச்சைக் கேட்காதீர்கள். உங்கள் சொந்த வீட்டில் வாழ்வது ஒரு சிறப்பு. வீடு வாங்க முடிந்தால் வாங்கவும். ஆனால் கடன் பிரச்சனைக்குள் சிக்காதீர்கள்" என்று பதிலளித்தார்.
https://twitter.com/amangoeliitb/status/1820133462931886547
இதற்கு பதிலளித்த கிரண் ராஜபுத், "சொந்த வீடு இல்லாதது ஒரு சமூக அவமானமாகப் பார்க்கப்படுவது தவறு. சில துணிச்சலான நடுத்தர வர்க்கத்தினர் இந்த எல்லைகளை உடைத்து தங்கள் குடும்பத்தை நடுத்தரவர்க்கப் போராட்டத்திலிருந்து உயர்த்திக் கொள்கிறார்கள். எனக்கு வீடு இல்லை என்று சொன்னால் என்னைக் கூட திட்டுகிறார்கள். நான் Finfluencers மிக்கவர் அல்ல, என் தோல்விகள் மற்றும் கற்றறிந்த பாடங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று விளக்கம் கொடுத்தார்.
ஆனால் இருவரின் பதிவுக்கும் ஏகப்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கப்பட்டு உள்ளனர். கிரண் ராஜ்புட் பதிவுக்கு 2.44 லட்சம் பேரும், அமன் கோயல் பதிவுக்கு 1.60 லட்சம் பேரும் பார்த்துள்ளனர். இந்த பதிவு குறித்து சமூக வலைத்தள பயனர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா..?
"நிதி ஆலோசகர்கள் (Finfluencers) எப்படி இதை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வீடு வாங்குவது என்பது உங்கள் சுயமரியாதை அதிகரிக்கும் ஒரு இடம் போன்றது. இந்தியாவில் வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும் போது, சொந்தமாக வீடு இருப்பது பெரும் நிம்மதியைத் தரும். சொந்த வீடு என்பது ஒரு நடுத்தர வர்க்க மக்களுக்குத் தியானம் செய்வது போன்ற உணர்வைத் தரும்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"நான் என் வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகிறேன், வீட்டை விட்டு வெளியே செல்லுவது போன்ற அனுபவத்தை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஒரு வீட்டில் வசிக்கத் திட்டமிட்டால் மட்டுமே வீடு வாங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும். என் தொழில் என்னை ஒரு நகரத்தை விட்டு மற்றொரு நகரத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, எனவே எனக்கு வாடகை எடுப்பது மிகவும் பொருத்தமானது" என்று மற்றொருவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications