பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்படும் விகிதம் 20% வரை உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் காதலர் தினம் வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ளதால், சனி மற்றும் ஞாயிறு என சேர்த்து பலரும் மூன்று நாட்கள் கொண்டாடுவதற்காக ஹோட்டல்களுக்கு செல்வது மற்றும் சுற்றுலா செல்வது என திட்டமிட்டுள்ளனர். மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள தகவலின் படி காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு ஹோட்டல்களிலும் அறைகள் முன்பதிவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் என அதிகரித்துள்ளது .

குறிப்பாக வார இறுதி நாட்களான சனி , ஞாயிற்றுக்கிழமை விடுமுறையும் வருவதால் பல ஹோட்டல்களில் மூன்று நாட்களுக்கு சுமார் 75 லிருந்து 85 சதவீதம் வரை அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக பயணம் தொடர்பான ட்ராவல்கி என்ற நிறுவனத்தை நடத்தும் கேரன் முல்லா தெரிவித்துள்ளார். சரோவர் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கடந்த ஆண்டை விட தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான ஹோட்டல்களில் எல்லாம் 15 சதவீதம் அதிக முன்பதிவு நடைபெற்றிருப்பதாக கூறியுள்ளார்.
அதேபோல ரேடிசன் ப்ளூ ஹோட்டல் நிறுவன உரிமையாளர்களும் தங்கள் ஹோட்டல்களில் பெரும்பாலான அறைகள் காதலர் தினத்தை முன்னிட்டு முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு டிமாண்ட் அதிகரித்துள்ளதால் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் அறைகளின் வாடகை 15 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாக கூறுகின்றனர்.
இந்தியாவில் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ஆடம்பர தங்குமிடங்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதாம். குறிப்பாக தனித்துவமான தங்கும் அனுபவங்களை வழங்கக்கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளில் எல்லாம் அறைகளை முன் பதிவு செய்வதற்கு கடும் போட்டி நிலவியதாக சொல்லப்படுகிறது. பலரும் தனிப்பட்ட சமையல் கலைஞர் கொண்ட வில்லாக்களை முன் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
ஆடம்பர ஹோட்டல்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு அறைக்கான தங்கும் வாடகை 18 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறதாம். அகோடா என்ற டிராவல் தளம் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு உள்நாட்டில் சுற்றுலா செல்வதற்காக இடங்களை தேடும் நபர்களின் எண்ணிக்கை 83 சதவீதம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பலரும் கோவா, அலகாபாத் ,வாரணாசி ,டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்வதில் ஆர்வம் காட்டியதாகவும் அது தொடர்பான விவரங்களை தேடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சுற்றுலா செல்வதற்காக தேடியவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் உயர்ந்துள்ளது. துபாய், பாங்காக், பட்டாயா , பாலி ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications