உலகமே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட G20 உச்சி மாநாடு, செப்டம்பர் 9 முதல் 10 தேதிகளில், நாட்டின் தலைநகரான டெல்லியில் நடக்க உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு உலக நாடுகளின் பார்வை அனைத்தும் இந்தியா பக்கம் தான் இருக்கப்போகிறது. ஜி20 உச்ச மாநாட்டிற்காக ஒட்டுமொத்த டெல்லியும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் G20 உச்சி மாநாட்டிற்காக டெல்லி பிரகதி மைதானத்தின் மையத்தில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபம் மொத்த மாநாட்டின் சென்டர் ஆஃப் அட்டிராக்ஷன் ஆக உள்ளது. இதுதவிர மாற்றம் அலங்கார விளக்குகள், பூக்கள் மற்றும் தோட்ட அலங்காரம் என மொத்த டெல்லியும் சலவைக்கு போட்டது போல் சுத்தமாகி உள்ளது.

பாரத் மண்டபம் மட்டும் அல்லாமல் ஜமா மஸ்ஜித் மற்றும் குதுப் மினார் உட்பட டெல்லியில் பல அடையாளங்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதே போல் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு செல்லும் அனைத்து முக்கிய சாலைகள், சாணக்யபுரியில் உள்ள தாஜ் பேலஸ் போன்ற முக்கிய ஹோட்டல்கள், சிறப்பு விளக்குகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்த பெருமை மிக்க ஜி20 உச்ச மாநாட்டிற்கு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் புதுடெல்லி வந்து ஐடிசி மௌரியா நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். பிரிட்டனின் பிரதமராக உள்ள ரிஷி சுனக் ஷாங்கிரி லா ஹோட்டலில் தங்குவார்.
சீனத் தூதுக்குழு டெல்லி தாஜ் ஹோட்டலில் தங்கவுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜி 20 உச்சி மாநாட்டுக்காக புது டெல்லி லலித் ஹோட்டலில் தங்குவார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இம்பீரியல் ஹோட்டலில் தங்குகிறார்.
இப்படி ஒட்டுமொத்த டெல்லி ஸ்டார் ஹோட்டல்களும் ஜி20 உச்ச மாநாட்டிற்காக புக் செய்யப்பட்டு இருக்கும் வேளையில் தாஜ் ஹோட்டல் ஜி20 கூட்டத்திற்காக மூவர்ண கொடியின் நிறத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டோவை தாஜ் ஹோட்டல் நிர்வாகம் தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டு உள்ளது.
மேலும் டெல்லியில் தற்போது எங்கு திரும்பினாலும் போலீஸ், ராணுவம் என பாதுகாப்பின் உச்சத்தில் உள்ளது. இப்படியிருக்கையில் உயர் தலைவர்கள் தங்கும் ஹோட்டல்கள் அனைத்தும் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications