கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்த ஹோட்டல் துறையில் தற்போது மீண்டும் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் உள்ள விடுதிகளில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என வேலைக்காக ஆட்களை தேர்வு செய்து வழங்கக்கூடிய டீம் லீஸ்(TeamLease) சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை தங்கும் விடுதிகளில் துறையில் உருவாகின்றன என டீம் லீஸ் நிறுவனத்தின் துணை தலைவரான பாலசுப்ரமணியன் எக்னாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு பின் மக்கள் பழையபடி செலவு செய்ய தொடங்கியுள்ளனர், குடும்பத்துடன் சுற்றுலா செல்வது உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே தங்கும் விடுதிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் அவற்றை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன என டீம் லீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராயல் ஆர்சிட் ஹோட்டல்ஸ் (Royal Orchid Hotels) நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான சந்தர் கே பாலாஜி, இந்த ஆண்டில் மட்டும் தங்களது ஹோட்டல்களில் புதிதாக 2000 அறைகளை சேர்க்க இருப்பதாகவும், 5,000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இது போன்ற சிறிய மற்றும் மத்திய அளவிலான தங்கும் விடுதிகளில் 30 முதல் 50 சதவிகிதம் வரை வேலை வாய்ப்புகள் உயர்ந்திருப்பதாக இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஃப்ரண்ட் டெஸ்க் (front desk), கெஸ்ட் ரிலேஷன் மேனேஜர் (guest relation manager), ஹவுஸ் கீப்பிங் (housekeeping) மற்றும் மெயின்டனன்ஸ் (maintainance) உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்களை தற்போது தேர்வு செய்து வருவதாக கூறுகின்றனர்.
அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 20% அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள துறை சார்ந்த நிபுணர்கள், இந்தியாவில் தற்போது உள்ளூர் சுற்றுலா உள்நாட்டு சுற்றுலா குறிப்பாக ஆன்மீக ரீதியான சுற்றுலா வளர்ந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
ராயல் ஆர்சிட்டை பொறுத்தவரை 6,000 அறைகள் கொண்ட 100 ஹோட்டல்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் தங்களது ஹோட்டல்களை வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா பகுதியில் விரிவுபடுத்தி வருகிறது.
ஃபார்ச்சூன் ஹோட்டல்ஸின் (Fortune Hotels) மேலாண் இயக்குனரான சமீர் ,தங்களது நிறுவனத்தில் புதிதாக ஆட்களை பணியமர்த்துவது என்பது நடப்பாண்டில் 8 முதல் 10% வரை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார். பார்ச்சூன் ஹோட்டல்ஸ் நிறுவனம் 56 நகரங்களில் தங்களுடைய தங்கும் விடுதிகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் பிரெண்ட் டெஸ்க், ஹவுஸ் கீப்பிங் .அட்மினிஸ்ட்ரேடிவ் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது.
லெமன் ட்ரீ (Lemon Tree )ஹோட்டல்ஸ் நிறுவனம் புதிதாக 3000 முதல் 4000 பேரை பணியில் சேர்க்க இருப்பதாக கூறியுள்ளது. கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவை தங்கும் விடுதிகள். அப்போது சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரும்பால பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.
தற்போது பொருளாதார நிலைமை மீண்டு மக்கள் சுற்றுலா செல்வது ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வது என்பது அதிகரித்துள்ளதால் மீண்டும் தங்குமிடங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
எனவே இந்த துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணி வாய்ப்புகள் அதிகரிக்கும் என மேன்பவர் குரூப் இந்தியா நிறுவனத்தின் அலோக்குமார் தெரிவித்துள்ளார். 2025ஆம் நிதியாண்டில் தங்கும் விடுதிகளை பொறுத்தவரை 7 -9 % வருவாய் வளர்ச்சி இருக்கும் என ஐசிஆர்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications